Video

cinemasocietyTamilnaduVideo

சாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா? புள்ளிங்கோன்னா கேவலமா? – நடிகர் தீனா ஆவேசம்

தமிழ் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தீனா. ஜிம் பாயாக இருந்து படிப்படியாக உயர்ந்த தீனா சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு வெளிப்படையாக ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவை கடந்து சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வு, வட சென்னை இளைஞர்களை புள்ளிங்கோ என அசிங்கப்படுத்தும் வன்மம், மேட்டுப்பாளையத்தில் 17 பேர் தீண்டாமை சுவறால் கொல்லப்பட்டது என பல விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ:

BackgroundPoliticsVideoworld

சு.சாமி முதல் இஸ்ரேல் வரை – ராஜீவ் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் “THE ALTERNATE”

ராஜீவ் கொலைக்கு தமிழர்கள் காரணமில்லை எனக்கூறி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் எனப்பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்த முரண்பட்ட கருத்துக்களால் அவரது கட்சியினரும், பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ராஜீவ் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளதா? கொலைக்கு பின்னணியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாத், இவர்களுடன் சுப்ரமணிய சாமிக்கு உள்ள தொடர்பு என பல விசயங்கள் குறித்து விரிவான வீடியோவை வெளியிட்டுள்ளது “தி ஆல்டர்நேட்” என்ற யூடியூப் சேனல். 40 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு நொடி கூட தொய்வு ஏற்படவில்லை. நேரம் செல்ல நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. ஒரு திரில்லர் கதையை படிப்பது போல் ராஜீவ் கொலை மர்மங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து சுவாரசியத்தை அதிகரிக்கிறார் நெறியாளர். அவசியம் பாருங்கள்…

EconomysocietyTamilnaduVideo

தீபாவளிக்கு எதுவும் விக்கல… தி.நகரில் காத்து வாங்கும் கடைகள்; கதறும் வியாபாரிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தி.நகரில் ஜவுளி மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிகக்குறைவான அளவிலேயே இருப்பதாக கூறுகிறார்கள் தி.நகர் வியாபாரிகள்.

ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியால் சிறு குறு தொழில்கள் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியாலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பலர் சென்னையை விட்டு சொந்த ஊர் பக்கம் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதிலும், அதற்கு புத்தாடைகள் வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து BEHINDWOODS யூடியூப் சேனலுக்கு தி.நகர் வியாபாரிகளிடம் அளித்த பேட்டி இதோ…

Educationfact checkVideo

போர்டுதாஸின் நவோதயா ரீல்… கிழித்து தொங்கவிட்ட இளைஞர் (வீடியோ)

மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மாரிதாஸ் என்ற பாஜக ஆதரவாளர், அக்கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார். இவரது பொய்களை பலர் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் “செய்கை தொடரும்” என்ற யூடியூப் பக்கத்தில் மாரிதாஸின் நவோதயா பள்ளிகள் குறித்த பொய்யான வீடியோவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

BackgroundPoliticsVideo

முகிலனை பற்றி பேசியவர்களையும் காணவில்லை… அதிர்ச்சி வீடியோ!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காக, சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், ஸ்டெர்லைட் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன் மாயமானார். அது குறித்து முகிலன் எங்கே? என பேஸ்புக்கில் கேக்வி எழுப்பி வந்த போராளிகள் தேர்தல் போர், ஐபிஎல் போர்களில் பிசியாகிவிட்டனர். அடுத்து உலகக்கோப்பை போரிலும் பங்கேற்க சென்றுவிடுவார்கள். இதனால், முகிலன் என்ற ஒருவரையே பலரும் மறந்துவிட்டோம். இந்த நிலையில் அவரை மீண்டும் நினைவுபடுத்தும் வகையிலும், அவரை பற்றி பேசியவர்கள் மாயமானது குறித்தும் “ப்ளாக் ஷீப்” என்ற யூடியூப் சேனல் குறும்படத்துடன் கூடிய விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது.

BackgroundTamilnaduVideo

இடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழியுமா? – ஜென்டில் மேன்களின் உள்ளத்தை உலுக்கும் வீடியோ

அண்மைகாலத்தில் நவீன சமத்துவம் பேசுவர்கள், மேல் தட்டில் இருந்துகொண்டு களம் நிலவரம் அறியாமல் பேசும் பேஸ்புக் போராளிகள், இயக்குநர் சங்கரின் ஜென்டில் மேன் படத்தை பார்த்துவிட்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் திடீர் சமூக ஆர்வலர்கள், சாதிச்சான்றிதழை கிழித்துவிட்டால் சாதி ஒழியும் என பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். கார்ப்பரேட்டுகளின் கைகூலிகளாக செயல்படும் NGOக்கள், சாதிவெறி அரசியல் கட்சிகள், குறிப்பிட்ட உயர்சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் இதுபோன்ற பொதுப்புத்தியை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றனர்.

இதனை கேட்கும் BC, MBC வகுப்புகளை சேர்ந்தவர்களும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசுவதை காணமுடிகிறது. இத்தகைய குழப்பவாதிகளின் பிரச்சாரங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் BLACK SHEEP யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் வர்ணாசிரம தத்துவத்தின் படி பிராமணர்கள் இந்திய மக்களை எப்படி சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி ஆதாயம் அடைந்து வருகின்றனர் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

crimeIndiasocietyVideo

அசாமில் பீஃப் விற்ற முஸ்லிம் முதியவரை அடித்து பன்றிக்கறி உண்ண வைத்த பயங்கரவாதிகள்

அசாம் மாநிலம், பிஸ்வானாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவரிடம் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதா என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளது. அவரும் உரிமம் இருப்பதாக கூறிய நிலையில், வங்கதேசத்திலிருந்து வந்தவனா நீ? உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா? என கேட்ட அந்த கும்பல் தங்களிடம் இருந்த பன்றிக்கறியை சௌக்கத் அலியின் வாயில் வைத்து அழுத்தி சாப்பிட கட்டாயப்படுத்தியது. இஸ்லாம் மார்க்கத்தில் பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளாதால் சௌக்கத் அலியும் அதனை உண்ண மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் முதியவர் என்றும் பார்க்காமல் அவரை அனைவர் முன்பாகவும் இரத்தம் சொட்ட சொட்ட அடித்து குற்றுயிராய் விட்டுச்சென்றனர்.இதுகுறித்து சௌக்கத் அலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தெரிவுத்துள்ள போலீசார், சௌக்கத் அலி கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் பீஃப் ஸ்டால் நடத்தி வருவதாகவும், அவர் இந்தியர் தான் என்றும் கூறினர்.

அசாம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது பசு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் கணக்கில் அடங்காதது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வரும் நிலையில் அசாமில் இஸ்லாமியர்களை வங்கதேச அகதிகளாக சித்தரித்து 40 லட்சம் முஸ்லிம்களை விரட்டுவதற்கு NRC சட்டதிருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. அது நடந்து முடிந்த ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேறாததால் அது குறித்து மீண்டும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது பாஜக. இதனை காரணமாக வைத்து வட கிழக்கு மாநிலங்களில் முஸ்லிம்களை வங்கதேச அகதிகள் எனக்கூறி இந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ComedyPoliticsTamilnaduVideo

2 கேள்வி தான்… பதிலளிக்க முடியாமல் நேர்காணலை நிறுத்திய தமிழிசை

தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு எதிர்ப்புகளை மீறி பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பிரச்சார மேடையிலேயே IBC தமிழ் செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அது குறித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய முடியாது என தமிழிசை மழுப்ப, பாஜக கூட்டணி கட்சிகள் அளித்திருக்கும் பல வாக்குறுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தானே என செய்தியாளர் கேட் போடுகிறார். உடனே தமிழிசை அதெல்லாம் இல்லை என்று சொல்ல, குறுக்கிட்ட செய்தியாளர் நீட் தேர்வு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதுபற்றி வாக்குறுதி அளித்துள்ளாரே என செக் வைக்கிறார்.

இதனால் நிதானமிழந்த தமிழிசை “தம்பி, தூத்துக்குடிக்கு நிறைய தேவைகள் இருக்கிறது. ஸ்டெர்லைட் குறித்து மட்டுமே கேள்வி எழுப்புகிறீர்கள்” என்றார். உடனே செய்தியாளர் “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஒரே நிலைபாட்டில் இருக்கும் போது…” என கேட்க தொடங்குபோதே ஆவேசமடைந்த தமிழிசை “தம்பி நாளைக்கு வாங்க பாத்துக்கலாம். உங்கள் உள்நோக்கம் தவறாக உள்ளது” என்று சொல்லி பேட்டியை முடித்துவிட்டு கிளம்பினார். இந்த வீடியோவை IBC தமிழ் யூடியூபில் வெளியிட பலரும் இரண்டு கேள்விக்கு கூட தமிழிசையால் பதில் சொல்ல முடியவில்லையா? என அடுத்த கேள்வியை முன் வைக்கின்றனர்.

வீடியோ:

societyVideoworld

முஸ்லிம் மாணவனை தாலிபான் என அழைத்து சர்ச்சையில் சிக்கிய ஜக்கி வாசுதேவ்

ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், LONDON SCHOOL OF ECONOMICS கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லிம் மாணவரை நோக்கி தாலிபான் எனக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார்.

கடந்த மார்ச் 27ம் தேதி லண்டன் பொருளாதாரப் பள்ளியில் நடைபெற்ற YOUTH & TRUTH என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக ஜக்கி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். அப்போது பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிலால் என்கிற மாணவர் “கல்லறையில் நீங்கள் செலவழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட இரவை, உங்களால் ஒருகாலும் வெளி உலகில் வாழமுடியாது” என்று வாழ்க்கை குறித்த தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இதை கேட்ட ஜக்கி வாசுதேவ் அந்த மாணவரை நோக்கி “இவர் ஒரு தாலிபான்” எனக் கூறினார். இந்த கலந்துரையாடல் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், லண்டன் பொருளாதாரப் பள்ளியின் மாணவர்கள் அமைப்பு ஜக்கியின் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியது. மேலும் ஜக்கியின் இத்தகைய வெறுப்பு பேச்சு தங்களை ஏமாற்றமடைய செய்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜக்கியோ “இந்தியாவில் தாலிபான் எனும் வார்த்தையை ஆர்வமிகு மாணவன் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துவோம்” என்று மழுப்பினார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த, லண்டன் பொருளாதார பள்ளியின் மாணவர்கள் அமைப்பு நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் ஜக்கி வாசுதேவின் இந்த காரணத்தை ஏற்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கோரியாக வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் மாணவர்களிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜக்கி வாசுதேவ் இந்தியா என நினைத்து கொண்டு லண்டனில் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு லண்டன் மாணவர்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.

cinemaVideo

திறமையை விட லுக் தான் முக்கியம் – ஏழை இளைஞர்களின் வலியை விவரிக்கும் ஆரா குறும்படம்

ஒரு வேலை வழங்குவதில் பார்க்கப்படும் ஏற்றத்தாழ்வுகள். இண்டெர்வீவ் டிரஸ் கோட், அதன் பின்னால் இருக்கும் ஏழைகளின் துயர் என பலவற்றை இந்த குறும்படம் விளக்குகிறது. ராஜ்கமல் நடித்து, இயக்கி பாண்டவாஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த குறும்படம் சம கால வேலை தேடும் ஏழை இளைஞர்களுக்கு திறமை இருந்தும் ட்ரஸ் கோட் போஅன்ற காரணங்களால் வேலை மறுக்கப்படுவதன் துயரத்தை பதிவு செய்கிறது. வேலையில்லா இளைஞர்கள், நேர்காணலை வைத்து நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூப் சேனல்களுக்கு மத்தியில் நேர்காணலுக்கு பின்னால் உள்ள இளைஞர்களின் கஷ்டத்தை இந்த குறும்படத்தின் மூலம் வெளியிட்ட பாண்டவாஸ் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

1 2
Page 1 of 2