hidden

hiddenIndiaPolitics

நிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை?

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்களும், எதிர்த்து 105 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஆதரித்த கட்சிகள்: பாரதிய ஜனதா, தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் பிஜூ ஜனதா தளம்ம் பஞ்சாபை சேர்ந்த பாஜக கூட்டணி கட்சியான சிரோமனி அகாலி தளம், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

எதிர்த்த கட்சிகள்: காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முஸ்லீம் லீக், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி.

இதில் மற்றுமொரு இந்துத்துவ கட்சியான சிவசேனை மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. மக்களவையில் தங்கள் கட்சி மசோதாவுக்கு ஆதரவளித்தபோதிலும் தாங்கள் அளித்த திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புறக்கணிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

hiddenIndiaworld

“எல்லை மீறி போறீங்க! இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தார்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியுரிமை திருச்சட்ட மசோதா இஸ்லாமியர்களை அடிமைப்படுத்துவதற்கும், சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கும், மத ரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்ய நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

குஜராத் கலவரத்தை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு இந்த ஆணையம் அளித்த பரிந்துரை காரணமாகவே அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தடை விதிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றுள்ளது.

EconomyhiddenPoliticsTamilnadu

மருத்துவம், இறுதிச் சடங்குக்காக ரூ.46,000 சேமித்த பாட்டிகள் – செல்லாமல் ஆக்கிய மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொம்மலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (72). இவர்களில் ரங்கம்மாளுக்கு 7 பிள்ளைகளும் தங்கம்மாளுக்கு 6 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம்மாள் ஆஸ்துமா பாதிப்பால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது பிள்ளைகளிடம், தனது மருத்துவத்துக்காகவும், இறுதிச் சடங்கிற்காகவும் ரூ.24,000 சேமித்து வைத்துள்ளதாக சொல்லி அது உள்ள இடத்தையும் கூறினார். அதை தேடி எடுத்த தங்கமாளின் பிள்ளைகளுக்கு அதிர்ச்சி. ஆம், அவர் சேமித்த பணம் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் செல்லாமல் ஆக்கினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கம்மாள் தனது, சகோதரி ரங்கம்மாளும் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.22,000 சேமித்துள்ளதாக கூறினார். இதனை கேள்விப்பட்ட ரங்கம்மாள் பணம் செல்லாமல் ஆக்கப்பட்ட செய்தியே தனக்கு தெரியாது எனக்கூறி, கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேமித்த பணம் இப்படி ஒன்னுக்கும் உதவாக வெற்று தாளாகி விட்டதே எனக்கதறினார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பால் நாடின் பொருளாதாரம் ஒரு அடி கூட முன்னேறவில்லை. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுபோல் ஏழைகளின் சேமிப்புகளும் வீணாக்கப்பட்டு வருகிறது.

hiddenworld

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போல், முழு நாடான பாலஸ்தீனையே மேப்பில் மறைத்த கூகுள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பாலஸ்தீன், அமெரிக்கா, பிரிட்டனின் வளர்ப்புக் குழந்தையான இஸ்ரேலுக்காக கூறுபோடப்பட்டு வருகின்றது. ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் நாள்தோறும் பாலஸ்தீன் மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் துடிதுடிக்க கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை கண்டும் காணாதது போல் பெரும்பான்மையான உலக மீடியாக்களும், உலக நாடுகளும், ஐ.நா. சபையும் மௌனம் காத்து வருகின்றன.

இஸ்ரேல் என்பதை ஒரு நாடாக அன்று இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்க மறுத்த காலம் போய், பாலஸ்தீனையே இஸ்ரேல் உடையதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்க நிறுவனமான கூகுள், பாலஸ்தீனையே தனது மேப்பில் இருந்து நீக்கியுள்ளது.

இணையதளத்தில், ஸ்மார்ட்போனில் மேப்பை தேடும் பலரது முதல் தேர்வு கூகுள் மேப் தான். அப்படிப்பட்ட கூகுள் மேப்பில் மத்திய கிழக்கு வளைகுடாவில் லெபனான், ஜோர்டான், இராக், இஸ்ரேல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பாலஸ்தீன் அங்கு இடம்பெற்வில்லை. மாறாக காசா எல்லையை மட்டும் Gaza strip என குறிப்பிட்டுள்ளனர்.

பாலஸ்தீனம் என டைப் செய்து தேடினால், அது ஏதோ இஸ்ரேலுக்கு உட்பட்ட ஒரு மாகாணத்தை போல் (Palestine country, Isreal) என வருகிறது. சாதாரணமாக நாம் ஒரு மாநிலத்தை கூகுள் மேப்பில் தேடினால் அதன் பெயருடன் நாட்டின் பெயரும் வரும். அதுபோல் பாலஸ்தீனுடன் இஸ்ரேல் பெயரும் வருகிறது.

அப்படியென்றால் பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட ஒரு மாகாணம் என கூகுள் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதனை கண்டித்து பலரும் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் கூகுள் மேப்புக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங்கை வழங்கி #WhereisPalestine என கேட்கத்தொடங்கி உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காஜா மீது இஸ்ரேல் பல நாள் தொடர் தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தான மக்களை கொன்றபோதும் பாலஸ்தீன் கூகுள் மேப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து 2016-ல் #PalestineisHere என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. 25 லட்சம் பேர் கூகுள் மேப்பை பாலஸ்தீனில் சேர்க்க ஆன்லைன் பெட்டிஷன் மூலம் கோரினர். பலத்த எதிர்ப்புகள் காரணமாக பாலஸ்தீன் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

hiddenPoliticsTamilnadu

ஆந்திராவில் 98 ரூபாய்க்கு ஜோராக விற்பனையாகும் தமிழக அரசின் இலவச பொங்கல் சேலை

தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், பொங்கல் பண்டிகைக்கு ஏழை மக்களும் புத்தாடை அணிய வேண்டும் என்ற நோக்கத்திலும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 1983-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த வேட்டி சேலை ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோவை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 2.50 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக மூலம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி ரேஷன் கடைகளில் விரைவில் வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அதற்காக தயாரிக்கப்பட்டு உள்ள சேலைகள் ஆந்திர மாநிலன் திருப்பதியில் உள்ள சி.எம்.ஆர். என்ற கடையில் தமிழக அரசின் சீலுடன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகைப்படங்களுடன் தகவல் வெளியாகி இருக்கிறது. 2019 என்று அச்சிடப்பட்டுள்ள அந்த சேலை ஒன்று ரூ.196 என்று குறிப்பிடப்பட்டு 50% டிஸ்க்ண்ட் அறிவிக்கப்பட்டு 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களுக்கு விநியோகம் செய்த பின்னர், அதை பயன்படுத்தாதவர்களிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களில் விற்பது வழக்கம். அரசு வழங்கிய இலவச பொருட்களை விற்பனை செய்வதே குற்றம் என அரசு அறிவித்து அதற்கு தடை விதித்துள்ளபோது, மக்களிடம் விநியோகிப்பதற்கு முன்பாகவே இந்த இலவச பொங்கல் சேலைகள் ஆந்திராவில் விற்பனை செய்யப்படுவது எப்படி என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது. இது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அல்லது ஆளுங்கட்சியினரின் துணையுடன் தான் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது.

பண்டிகைக்கு ஒரு சேலைகூட வாங்க முடியாத ஏழை மக்கள், அரசின் பொங்கல் சேலையை ஆசையுடன் வாங்கிக்கட்டுவதை கிராமங்களில் பார்க்க முடியும். அப்படிப்பட்டவர்களுடைய உடமைகளையும் திருடும் வகையில் கள்ளச்சந்தைக்கு கடத்துவது மிகவும் கொடுமையானது. இதுபோல் கள்ளச்சந்தைக்கு இலவச சேலை கடத்தப்படுவதால் ரேஷன் கடைகளில் முதலில் வருபவர்களுக்கு மட்டும் சேலை கிடைக்கும் நிலை உண்டாகும். இதுகுறித்து அரசு விரைந்து விசாரணை நடத்தி ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.

healthhiddenTamilnadu

தமிழகத்தில் கொத்துக் கொத்தாக சாகும் குழந்தைகள்… இன்று 7 வயது சிறுமி அனுஸ்ரீ

சேலத்தை அடுத்த கோனேரிவளவு பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை அடுத்துள்ள தாரமங்கலம் கோனேரி வளவு பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவரின் மகள் அனுஸ்ரீ(வயது 7). 3-ம் வகுப்பு படித்து வந்த அனுஸ்ரீ 4 நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாரமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் காய்ச்சல் கடுமையானதால், சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

EducationhiddenTamilnadu

மாணவி உயிர்பறித்த மதவெறி – IIT-ஐ முற்றுகையிட்ட மாணவர் அமைப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாத்திமா லத்தீப் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பினர் ஐ.ஐ.டி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேண்டும் வேண்டும் பாத்திமாக்கு நீதி வேண்டும் இது போன்ற மரணங்கள் இனி வரக்கூடிய காலங்களில் நிகழாமல் அரசு தடுத்திட வேண்டும் என்று அவர் முழக்கத்தை முன் வைத்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பாத்திமா மரணத்திற்கு காரணமாக இருப்பவர்களை உடனடியாக ஐஐடி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர்.

healthhiddenPoliticsTamilnadu

எங்க கிட்ட கேட்காம ஸ்கூல்ல தடுப்பூசி போட்டாங்க, இப்போ என் மகன் உயிருக்கு போராடுறான் – கதறும் பெற்றோர்

பண்ருட்டி வட்டம் அங்குசெட்டிப்பாளையம் பழைய காலனியைச் சேர்ந்தவர் சத்தியகுமார்-தனம் தம்பதியினர். இவர்களது மகன் பவன்சங்கர் (5). தற்போது பெங்களூருவில் உள்ள மூளை, நரம்பு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இதுகுறித்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், அருகிலுள்ள தட்டான்சாவடியிலுள்ள தனியார் பள்ளியில் பவன்சங்கர் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதியன்று பள்ளியில் தொண்டை வீங்கி தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக இதற்கு சம்மதம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பேட்டில் பவன்சங்கருக்கு மூச்சிரைப்பு உள்ளதால் தடுப்பூசி போடலாமா என்று கேட்டு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. ஆனால், எவ்விதமான பதிலும் தெரிவிக்காமல் ஊசி போட்டுள்ளனர்.

ஊசி போட்ட பின்னர் அவருக்கு வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோருக்கு தெரிவிக்காமல் வீட்டில் விட்டுச் சென்றனர். இதனால், அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டதாலும், நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதாலும் சிகிச்சைக்காக கடலூர், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள மத்திய அரசின் மூளை, நரம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு என்ன வகை தடுப்பூசி மருந்து கொடுத்தீர்கள் என்று பெங்களூரு மருத்துவர்கள் கேட்டுள்ளனர். இதனை தெரிந்துகொள்ள பள்ளிக்குச் சென்று விபரம் கேட்டவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே, பவன்சங்கரின் தற்போதைய நிலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனுக்கும் சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

hiddensocietyTamilnadu

நேத்து சுபஸ்ரீ, இன்னைக்கு அனுராதா… அப்போ அதிமுக பேனர், இப்போ அதிமுக கொடி

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அணுராதா. 30 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு செல்வதற்காக, அணுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அணுராதா கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் சடன் பிரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறிவிட்டது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கால்களில் அறுவை சிகிச்சை செய்து இரண்டு கால்களும் அகற்றப்பட்டது.

அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில், தற்போது அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

hiddenIndiaLaw

நான் தீர்ப்பளித்தால் பாபர் மசூதியை கட்ட சொல்லி இருப்பேன் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது…. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? ஏன்? மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் – – இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”

ஆதாரம்: டெலிகிராப்

1 2 3 13
Page 1 of 13