Economy

EconomyhiddenPoliticsTamilnadu

மருத்துவம், இறுதிச் சடங்குக்காக ரூ.46,000 சேமித்த பாட்டிகள் – செல்லாமல் ஆக்கிய மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொம்மலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (72). இவர்களில் ரங்கம்மாளுக்கு 7 பிள்ளைகளும் தங்கம்மாளுக்கு 6 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம்மாள் ஆஸ்துமா பாதிப்பால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது பிள்ளைகளிடம், தனது மருத்துவத்துக்காகவும், இறுதிச் சடங்கிற்காகவும் ரூ.24,000 சேமித்து வைத்துள்ளதாக சொல்லி அது உள்ள இடத்தையும் கூறினார். அதை தேடி எடுத்த தங்கமாளின் பிள்ளைகளுக்கு அதிர்ச்சி. ஆம், அவர் சேமித்த பணம் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் செல்லாமல் ஆக்கினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கம்மாள் தனது, சகோதரி ரங்கம்மாளும் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.22,000 சேமித்துள்ளதாக கூறினார். இதனை கேள்விப்பட்ட ரங்கம்மாள் பணம் செல்லாமல் ஆக்கப்பட்ட செய்தியே தனக்கு தெரியாது எனக்கூறி, கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேமித்த பணம் இப்படி ஒன்னுக்கும் உதவாக வெற்று தாளாகி விட்டதே எனக்கதறினார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பால் நாடின் பொருளாதாரம் ஒரு அடி கூட முன்னேறவில்லை. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுபோல் ஏழைகளின் சேமிப்புகளும் வீணாக்கப்பட்டு வருகிறது.

EconomyTamilnadu

தங்கம் போல் உயரும் காய்கறி விலை

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரப்படி, முருங்கைக்காய் ஒரு கிலோ 180 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், கோவைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய், பச்சை மிளகாய் கிலோ 50 ரூபாய், இஞ்சி கிலோ 80 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தொடர்ந்து காய்கறி விலை ஏற்றத்துடன் இருப்பது தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை காரணமாக பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்த காரணத்தினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இன்னும் இரண்டு மாத காலத்திற்கு இதே அளவில் தான் விலை இருக்கும் என்றும் அதன் பிறகு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை உச்சத்தை தொட்டு வந்த நிலையில் தற்போது காய்கறிகளும் விலை உயர்ந்து வருவது பொதுமக்களை மிகப்பெரிய பாதிப்படையச் செய்துள்ளது.

EconomyTamilnadu

வெங்காயம் பதுக்கினாலோ அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை – அரசு எச்சரிக்கை

வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 10 பெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையிலுள்ள நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

மேலும், வெங்காய விலை உயர்வினை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அங்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள பண்ணைப் பாலம் நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

BackgroundEconomyIndia

அடிமேல் அடிவாங்கும் ஐடி… ஊசலாடும் பல லட்சம் இந்தியர்களின் வேலை

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகள், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான போக்கை கையாளுவது, ஊழலில் ஈடுபட்டு வங்கிக்கடன்களை வழங்கிவிட்டு வங்கிகளை திவாலாக்கும் நிலைக்கு தள்ளியது போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்ததுடன், லட்சக்கணக்கானோர் வேலையும் பறிபோனது. பலருக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டது வார பணி நாட்கள் ஊதியத்துடன் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அடிவாங்க தொடங்கி இருக்கிறது மற்றொரு முக்கிய துறையான மென்பொருள் துறை. அந்த வகையில் இந்திய நிறுவனமான காக்னிசண்ட் 2020 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் சென்னையில் எத்தனை பேரை நீக்கம் செய்ய உள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், குறிப்பாக அதிகம் ஊதியம் பெரும் மூத்த பணியாளர்களையே காக்னிசண்ட் குறிவைத்துள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு பிராஜெக்டுகள் குறைந்ததால், அனைத்து துறைகளிலும் பணியாளர் குறைப்பு மட்டுமே நடந்துவருகிறது. எந்த நிறுவனமும் புதிய பணியாளர்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கவில்லை. இந்த சூழலில் பணிநீக்கம் செய்யப்படும் காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைப்பதும் கேள்விக்குறியே.

இதே போல் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஐ.டி. நிறுவனங்கள் , பொருளாதார வீழ்ச்சியால் புதிய ப்ராஜக்டுகள் இன்றி தவிப்பதால் பல லட்சம் ஐ.டி. ஊழியர்களின் வேலை ஊசலாடி வருகிறது. ஐ.டி. ஊழியர்களை நம்பியே பல உணவகங்கள், தங்கும் விடுதிகள், கால் டாக்சிகள், வாடகை வீடுகள், ஆட்டோக்கள், சாலையோர கடைகள் இயங்குகின்றன. இந்த ஐ.டி. தொழில் முடங்கினால் அவர்களை சார்ந்துள்ள இந்த பெரும்பாலானோரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியை காண்போம்.

EconomyHeadlinesTamilnadu

விஜய் சேதுபதியே இப்படி செய்யலாமா? குமுறும் வியாபாரிகள்…

தமிழ்திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய நடிகராக வலம் வருகிறார். திரைப்படங்களை கடந்து சமூக அக்கரை கொண்ட அவரது பேச்சுக்களால் மக்களை அதிகம் கவர்ந்துள்ளன. எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் திரைப்படங்களை நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு தற்போது ஒரு விளம்பரப்படத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், MANDEE எனப்படும் ஆன்லைன் மளிகை, பல சரக்கு விற்பனை இணைய விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்ததற்கு வியாபாரிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால், மொபைல், வாட்ச், காலணிகள், ஆடைகள், வீட்டு உபயோக பொருள் விற்பனை செய்யும் கடைகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் MANDEE இணையதளத்தால் தமிழகத்தில் உள்ள மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள் பாதிக்கப்பட்டு மூடும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சமூக அக்கரை கொண்ட படங்களில் நடித்து, சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை துணிச்சலாக சொல்லி வரும் விஜய் சேதுபதியே சிறு, குறு வணிகத்தை நசுக்கும் கார்ப்பரேட் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கலாமா என வியாபாரிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதியை கண்டித்து நவம்பர் 04ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வியாபாரிகள் அறிவித்து உள்ளனர்.

BackgroundEconomyIndia

நம்ம நகைகளுக்கும் ஆப்பு… ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்புக்கு பின் 3-வது கம்பை சுற்றும் மோடி சர்க்கார்

கலைஞர் செய்திகள்:

“மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போன்று, ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரியை வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரமாக செயல்படுத்தவும் மோடி அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கணக்கில் வராத தங்கம் வைத்திருக்கும் தனி நபர்கள், தாங்களாகவே அவற்றின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தாக வேண்டும். தானாகவே, முன்வருபவர்களுக்கு குறைந்தபட்ச அபராதவரி விதிக்கப்படும். மாறாக, கணக்கிடப்பட்ட வரம்பை மீறி தங்கம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பணமதிப்பு நீக்கத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், அதனை தங்கமாக மாற்றிக் கொண்டதாகவும், அதனைக் கண்டுபிடிக்கும் வகையிலேயே இந்த திட்டத்தை ‘யோசித்து’ மோடி அரசு கொண்டு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தில், 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 1.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் நடுத்தரமக்களின் சிறுசேமிப்பு என்ன முறையே முற்றிலும் அழியக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.”

Source: https://www.kalaignarseithigal.com/india/2019/10/31/modi-government-decides-to-levy-fines-for-unaccounted-gold-and-without-receipt

விமர்சனம்:

இனி தங்க ஆபரணங்களை எல்லாம் வீட்டு அலமாரியில் வீசி விட்டு, ரசீது தாள்களை மட்டும் லேமினேஷன் போட்டு வங்கி லாக்கரில் வைத்து பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய கோமாளித்தனம் எல்லாம் அரங்கேறும் காலம் வந்துவிட்டது.

ரசீது என்கிற ஒரு வஸ்து நடைமுறையில் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன்னரே… நெல் மூட்டைகளை பொற்கொள்ளர்களிடம் பண்டமாற்றாக கொடுத்து வாங்கப்பட்ட விவாசய குடும்பத்து கொள்ளு பாட்டி காலத்து தங்க நகைகள் எல்லாம் இன்னும் அப்படியே பாலீஷ் போட்டு பளபளப்பாக உள்ளன. இதெல்லாம் தெரிந்தும் தெரியாத புரிந்தும் புரியாத அறிந்தும் அறியாதவர்கள்… இதையெல்லாம் ஒரு காரணமாகக்கூறி பொதுமக்களிடம் அபராதவரி என்கிற பெயரில் திருடத்துவங்கிவிட்டனர்.

வருமானம் வரும்போதே கணக்கில் காட்டி Tax Detuction at Source என்று வருமான வரி கட்டிவிட்டுத்தானே மிச்ச மீதியை உணவாகவும் உடையாகவும் பொருளாகவும் நகையாகவும் வாங்குகிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி வரி கட்டிய ரசீதுதான் வேண்டும் எனில், சென்ற வருஷம் GST வரிகட்டி வாங்கிய என் தந்தையின் பிஞ்ச செருப்பின் ரசீது கூடத்தான் என்றோ தொலைந்துபோய் விட்டது. நாளை அதற்கும் ரசீது கேட்டுவிட்டு ஓர் அபராதவரி வசூலிப்பார்கள் போல. ரிசர்வ் வங்கியின் நகையை விற்றுவிட்டு மக்களின் நகைகளை பிடுங்க அரசு முயல்கிறதோ…?

EconomyhiddenIndia

காலியாகிறதா இந்தியாவின் கஜானா?

கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

Source: NEW INDIAN EXPRESS

இந்த நிலையில் இந்த தகவலை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழாக்கம்: நியூசு.இன்

BackgroundEconomyTamilnadu

தீபாவளிக்கு ஒரு துணியும் ஓடல… குமுறும் வியாபாரிகள்!

இந்த ஆண்டு தீபாவளி மிகவும் மந்த நிலையை எட்டி உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வியாபாரம் செய்த கடைகள் இன்று 50,000 மட்டுமே வியாபாரம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் வர்த்தகத்தால் மக்கள் வீட்டிலேயே இருந்து துணிகளைஆர்டர் செய்து வாங்கியதால் வியாபாரம் குறைந்ததா? அல்லது பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் துணிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லையா? என வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு தீபாவளி மிகவும் மந்த நிலையை எட்டி உள்ளதால் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆடைகள் மலிவாக கிடைக்கும் என்பதனால் ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை GA ரோடு வணிக பகுதியில் குவிவது வழக்கம்.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருவிழா போல எந்நேரமும் கூட்ட நெரிசலால் வண்ணாரப்பேட்டை சிக்கித் தவிக்கும் தீபாவளிப் பண்டிகையின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலால் அல்லல்படும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மிகவும் மந்தமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் புதிய ஆடைகள் எடுப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. சாதாரணமாக எப்போதும் இருப்பது போல துணிக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் வீட்டில் இருந்தே துணிகளை ஆர்டர் செய்வதால் மக்கள் வெளியில் வரவில்லை என கூறுகினறனர். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால் வியாபாரிகள் வேதனையில் உள்ளனர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே வியாபாரம் ஜவுளி வியாபாரம் நடந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

EconomyhiddenIndia

கள்ளநோட்டில் குஜராத் முதலிடம்… பணமதிப்பு இழப்புக்கு பிறகு கள்ளநோட்டு இருமடங்கு அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒரே இரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு DEMONITISATION எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. கருப்புப் பண புழக்கத்தை குறைக்கவும் கள்ளநோட்டுக்களை ஒழிக்கவும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர் மோடி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா புதிய பரிணாமத்துடன் காட்சியளிக்கும் என்பது மோடியின் வாக்கு. ஆனால் கருப்புப் பணமும் கள்ளநோட்டு புழக்கமும் குறைந்தபாடில்லை என்கிறது தேசிய குற்ற பதிவேட்டின் ஆய்வறிக்கை. (National Crime Records Bureau)

தேசிய குற்ற பதிவேட்டின் படி (NCRB), பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதாவது வெறும் 2017ம் ஆண்டு மட்டும் ரூ.28.1 கோடி கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது 2016ம் ஆண்டு (ரூ.15.9 கோடி) கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகளை விட இரண்டு மடங்கு அதிகம்.

2017ம் ஆண்டில் மட்டும் 3,55,994 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் 65,731 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 1,02,815 பழைய 500 ரூபாய் நோட்டுகள், 8,879 புதிய 500 ரூபாய் நோட்டுகள், 92,778 நூறு ரூபாய் நோட்டுகள் அடங்கும்.

கள்ளநோட்டு புழக்கத்தில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முதல் மாநிலமாக திகழ்கிறது. குஜராத்தில் மட்டும் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 6.7 கோடி கள்ள நோட்டுகளுடன் டெல்லியும் 2.8 கோடியுடன் உத்தரப் பிரதேசமும் முறையே 2 மற்றும் 3ம் இடங்கள் வகிக்கின்றன. இதுமட்டுமின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பிறகு முன்பை விட 480 சதவீதம் சந்தேகத்திற்குரிய பண பரிவரித்தனைகளை கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான நிறங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதும் கள்ளநோட்டு தயாரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார் பொருளாதார வல்லுநரான மதன் பத்னாவிஸ். மோடியின் சொந்த மாநிலமே கள்ளநோட்டு புழக்கத்தில் முதல் இடம் வகிப்பது வேடிக்கையாக இருந்தாலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் உண்மை நோக்கம் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

ஆதாரம்: தி பிரிண்ட் இணையதளம்

தமிழாக்கம்: நியூசு.இன்

1 2 3 5
Page 1 of 5