Tamilnadu

cinemasocietyTamilnaduVideo

சாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா? புள்ளிங்கோன்னா கேவலமா? – நடிகர் தீனா ஆவேசம்

தமிழ் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தீனா. ஜிம் பாயாக இருந்து படிப்படியாக உயர்ந்த தீனா சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு வெளிப்படையாக ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவை கடந்து சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வு, வட சென்னை இளைஞர்களை புள்ளிங்கோ என அசிங்கப்படுத்தும் வன்மம், மேட்டுப்பாளையத்தில் 17 பேர் தீண்டாமை சுவறால் கொல்லப்பட்டது என பல விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ:

fact checkTamilnadutechnology

“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி

ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏ.டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்ததாக பல்வேறு தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகின. இது கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக மீம்கள் வாயிலாக பேசுபொருளாக இருந்து வந்தது. பலருக்கும் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இத்தகையை குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் வகையில், ஏடிஜிபி ரவி இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார். அதில், “குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுப்பவர்கள், அதை பரப்புபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். பார்ப்பவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது. அவர்களுக்கே தெரியாமல் கூட பார்க்கும் வாய்ப்பு உள்ளது. யூடியூபில் நான் சொன்னதை மிகைப்படுத்தி கூறிவிட்டார்கள்” என்றார்.

crimefarmersTamilnadu

விலை உயர்ந்த 400 கிலோ வெங்காயம் கொள்ளை… பெரம்பலூரில் துணிகரம்!

பெரம்பலூர் அருகே வயல்வெளியில் பட்டறை போட்டு பாதுகாத்து வந்த 400 கிலோ வெங்காயம் திருட்டு

பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் தனது வயல்வெளியில் 400 கிலோ சாம்பார் வெங்காயத்தை பட்டறை போட்டு பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில் வெங்காயம் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் மர்ம நபர்கள் சக்திவேலின் வெங்காயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

fact checkIndiaPoliticsTamilnadu

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வாக்களிக்காமல் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததா?

குடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், “ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே” என்கிறார்கள். இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களித்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் ஆதாரம் இல்லை. எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இதையெல்லாம்விட உச்ச கட்டக் குழப்பம், முரசொலியில் வந்த செய்தி. “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது! மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு! தி.மு.க. வெளிநடப்பு!” என்றது அந்தச் செய்தி.

ஆகவே, தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர். பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

உண்மையில் என்ன நடந்தது?

வாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்சனை. பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்பிக்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு – எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது. லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன.

11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.

முரசொலி ஏன் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக செய்தி வெளியிட்டது?

அதாவது காலையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அறிமுக நிலையிலேயே அந்த மசோதாவை தி.மு.க. எதிர்த்தது. அந்தத் தருணத்தில்தான், அதனை எதிர்த்துப் பேசிவிட்டு டி.ஆர். பாலு வெளிநடப்புச் செய்தார்.

இந்தச் செய்திதான் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக முரசொலியில் வெளியானது. தினத்தந்தி செய்தியிலும் தலைப்பில் தி.மு.க. வெளிநடப்பு என்று இருந்தாலும், செய்திக் கட்டுரையின் உள்ளே, தி.மு.க. அறிமுக நிலையில் வெளிநடப்புச் செய்ததாகவும் பிறகு திரும்பி வந்ததாகவும் இருந்தது.

எல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்!

-முரளிதரன் காசி விஸ்வநாதன்

BackgroundEducationTamilnadu

பள்ளிகளில் இனி ஆசிரியர், மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் இல்லை

இரண்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் யோகா இயற்கை மருத்துவ முகாம் காரைக்காலில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை இன்று புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், கல்வி அமைச்சருமான இரா.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், மாணவர்கள் தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்த water bell திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார். இதேபோல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கென தனியாக கழிவரைகள் இருக்கக் கூடாதென கூறிய அவர், மாணவர்களின் கழிவரைகளையே ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் அப்போதுதான் மாணவர்களின் கழிவரைகளும் சுகாதாரமாக இருக்கும் என்றார்.

நியூசு விமர்சனம்:

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் உள்ளன. இதில் பலவற்றில் ஆசிரியர் கழிவரைகள் சுகாதாரத்துடனும், மாணவர் கழிவரைகள் சுகாதாரம் இன்றியும் இருப்பதை காண முடியும். காரணம், கேள்வியெழுப்பும் அதிகாரம் படைத்த தலைமை ஆசிரியரும் ஆசிரியர் கழிவரையை தான் பயன்படுத்துவார். இந்த நிலையில் அனைவருக்கும் ஒரே கழிவரை என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். புதுச்சேரி அரசை போல் தமிழகத்திலும் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும்.

BackgroundPoliticsTamilnadu

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குதுல… இந்த வருசமும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபா இருக்கு

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ₹1,000 வழங்குவற்கு, ₹2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

இந்த ஆண்டும் பரிசு தொகை வழங்க 2363 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் ரேசன் அட்டைகளாக ஆன்லைன் மூலம் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதற்காகவும் கூடுதலாக 100 கோடிரூயாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நியூசு விமர்சனம்:

தமிழக அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களவை தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக தான் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவர்வதற்காக இந்த ஆண்டும் ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசின் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வைப்பு நிதி வழங்கக்கூட பணம் இல்லை என அரசு கைவிரிக்கும் நிலையில், இந்த ₹2,363 கோடி செலவு தேவைதானா என்ற கேள்வி எழாமல் இல்லை.

EconomyhiddenPoliticsTamilnadu

மருத்துவம், இறுதிச் சடங்குக்காக ரூ.46,000 சேமித்த பாட்டிகள் – செல்லாமல் ஆக்கிய மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொம்மலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (72). இவர்களில் ரங்கம்மாளுக்கு 7 பிள்ளைகளும் தங்கம்மாளுக்கு 6 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம்மாள் ஆஸ்துமா பாதிப்பால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது பிள்ளைகளிடம், தனது மருத்துவத்துக்காகவும், இறுதிச் சடங்கிற்காகவும் ரூ.24,000 சேமித்து வைத்துள்ளதாக சொல்லி அது உள்ள இடத்தையும் கூறினார். அதை தேடி எடுத்த தங்கமாளின் பிள்ளைகளுக்கு அதிர்ச்சி. ஆம், அவர் சேமித்த பணம் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் செல்லாமல் ஆக்கினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கம்மாள் தனது, சகோதரி ரங்கம்மாளும் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.22,000 சேமித்துள்ளதாக கூறினார். இதனை கேள்விப்பட்ட ரங்கம்மாள் பணம் செல்லாமல் ஆக்கப்பட்ட செய்தியே தனக்கு தெரியாது எனக்கூறி, கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேமித்த பணம் இப்படி ஒன்னுக்கும் உதவாக வெற்று தாளாகி விட்டதே எனக்கதறினார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பால் நாடின் பொருளாதாரம் ஒரு அடி கூட முன்னேறவில்லை. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுபோல் ஏழைகளின் சேமிப்புகளும் வீணாக்கப்பட்டு வருகிறது.

EducationTamilnadu

5, 8-ம் வகுப்பு PUBLIC EXAM-ல் பெயில் ஆனாலும் பாஸ் தான் – அமைச்சர்

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும், 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பொருட்கள், மின்னணு சாதனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்திருப்பது ஏன், என கேள்வி எழுப்பினார். கல்வி அலுவலர்கள், தங்களது பணியை ஒழுங்காக செய்தாலே, தமிழகம் பள்ளிக்கல்வியில் நாட்டில் முதலிடத்துக்கு வந்துவிடும், என்றார்.

கல்வி அலுவலர்களின் பணியைக் கண்காணிக்கவே ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது, என்றார். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் எழுதி, பள்ளிகளுக்கு உதவுமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் உதவினால், அரசுப்பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

தனியார் பள்ளிகளில் CCTV சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் CCTV பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இசை, ஓவியம் மற்றும் நடனப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் Skill Training பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்கள் மூலம் பட்டயக்கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்கல்விக்கான பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் 5-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தேர்வுத்துறை தயாரித்து அனுப்பும். முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தேர்வு அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினார்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும். முன்னாள் மாணவர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போர் நிதி வழங்குவதுடன், அவர்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

Tamilnaduweather

கஜா போன்ற புயல் தாக்கினால் என்ன செய்வது? விரிவான அறிக்கை தாக்கல்

கஜா புயுல் பாதிக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் நகலை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 19 ம் தேதி வழங்கினார்.

இதில் கஜா புயலுக்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் பாதிப்பு ஏற்பட்டபின்பு எடுத்த நடவடிக்கைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்றும், எதிர்காலத்தில் புயலுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

தமிழகத்தை தாக்கிய பல்வேறு பேரிடர்களை அடிப்படையாக வைத்து, உடனே ஆபத்து ஏற்படக்கூடிய இடங்கள், மிகவும் அபாயகரமான இடங்கள் மற்றும் பாதிக்கப்படும் இடங்கள் எவை என்று தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆனால், மாவட்ட ரீதியாக இது குறித்த அறிக்கை இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் இந்த அறிக்கை தயாரிப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு ஏற்படும் இடங்கள் மற்றும் புயல் தாக்கிய பின்பு மக்களை மீட்டு பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் என்று முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கை தயார் செய்து வைத்து இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி புயல் பாதிக்கப்படும் கடலோர பகுதிகளை கண்டறிந்து, புயல் கரையை கடக்கும் போது வேகத்தை குறைக்கும் வகையில் இயற்கை அரணாக மரங்கள் நடப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் 3,31,772 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வரும் காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் புதைவிட மின் கம்பிகள் பதிக்கப்படவேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் குடியிருப்புகள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதை தடுக்கம் வகையில், கடற்கரை மண்டலத்தை முறைப்படுத்துதல் என்பதின் கீழ் (Enacting Coastal Zone Regulation) சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்கள் கட்டுவதை முறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு குறித்து முழுமையான விபரங்கள் அடங்கிய டேட்டா பேஸ் (Data base) தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

புயல் பாதிக்கப்பட்டால் எந்தெந்த அரசு துறைகள் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, புயல் பாதிப்பின் போது யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதை உணரும் வகையில் ஆய்வுக்கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டும். அப்போது தான் காலதாமதத்தை தவிர்த்து மீட்பு பணிகளை விரைவாக செய்யமுடியும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்துள்ளது.

farmersTamilnadu

விவசாயிகளின் பல ஆண்டு போராட்டத்துக்கு வெற்றி – மீத்தேன் ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டது

காவிரிப்படுகையில் மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்திக்கொண்டது. திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, இத்திட்டம் சாத்தியமில்லை என்று கருதி ஓஎன்ஜிசி நிறுத்தியுள்ளது. இது தமிழக மக்களின், குறிப்பாகக் காவிரிப் படுகை மக்களின் எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றியாகும்.

2013-இல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட மூன்று கட்டங்களாக, ஷேல் ஆய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் வழங்கியிருந்தது. இதில் முதல் கட்டமாக ஓ.என்.ஜி.சி ஐம்பது பிளாக்குகளிலும், ஆயில் இந்தியா லிமிடெட் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஐந்து பிளாக்குகள் வீதம் ஷேல் எண்ணெய் -எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது.

முதற்கட்டத்தில் காவிரிப்படுகையில் 9 பிளாக்குகளை ஷேல் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி பெற்றது. ஆனால் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, ஓ.என்.ஜி.சி யால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புத் திட்டம் இடம்பெற்றது. கிருஷ்ணா -கோதாவரி, அஸ்ஸாம், காம்பே ஆகிய பகுதிகளில் 26 கிணறுகளை அமைத்தது ஓ.என்.ஜி.சி. ஆனால், காவிரிப்படுகையில் ஒரு கிணறை கூட அமைக்க முடியவில்லை. திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பும், நிலவியல் காரணமும், மக்கள் எதிர்ப்பால் உருவான அரசியல் தலைமைகளின் எதிர்ப்பும் இத்திட்டத்தைக் கைவிடக் காரணம் எனலாம்.

நிலவியல் காரணமாகவும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும் கிணறுகளை அமைக்க முடியவில்லை என்று ஓஎன்ஜிசி காரணம் கூறியுள்ளது.

ஆனால் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. மக்கள் போராட்டம் வெல்லும். மக்கள் தொடர்ந்து களத்தில் நிற்பதன் மூலம் தங்கள் மண்ணையும், நிலத்தையும், நீரையும் சுற்றுச்சூழலையும் நிச்சயமாகப் பாதுகாக்க முடியும். மக்கள் போராட்டம் தொடரட்டும்!

—மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

1 2 3 32
Page 1 of 32