Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் கொரோனா

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம்

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சுரேஷ் அங்காடி. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக 2 வாரத்துக்கு முன் கொரோனா சோதனை செய்துகொண்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளாக நாளாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவ சேர்க்கப்பட்டார். 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்காமை சேர்ந்த சுரேஷ், பா.ஜ.க. சார்பில் 4 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவுக்கு அடுத்து அதிக செல்வாக்கு உடையவராக பார்க்கப்பட்டு வந்த இவரது மறைவு அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: