Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

தமிழ் தாய்ப்பால்; ஆங்கிலம் புட்டிப்பால் – அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா

சசிகலா விடுதலையான பிறகு அவர்களின் அரசியல் முடிவை பொறுத்து தமிழக அரசியலில் தாக்கம், மாற்றம் இருக்கும் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் 22 ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் பரமகுடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.,அன்வர் ராஜா முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ” ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா பணிகளை ஆய்வுகளை மேற்கொள்ள வருகை தரும் தமிழக முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பாக பார்த்திபனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பரமக்குடியை தொகுதியை சேர்ந்த அனைத்து ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்…
“இருமொழி கொள்கை தான் எங்களின் கொள்கை. தமிழ்நாட்டிற்கு தமிழ், உலகத்துக்கு ஆங்கிலம், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. கண்ணும் வேண்டும், கண்ணாடியும் வேண்டும், தமிழ் தாய் பால், ஆங்கிலம் புட்டிப்பால்,
இரண்டும் வேண்டும்.

சசிகலா விடுதலையான பிறகு அவர்களின் அரசியல் முடிவை பொருத்து தமிழக அரசியலில் தாக்கம், மாற்றம் இருக்கும். ஹிந்தியை படிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிக்கவில்லை, யார் வேண்டுமானாலும் எத்தனை மொழிகள் வேண்டுமாலும் படிக்கலாம். ஜெயலலிதாவிற்கு ஆறு மொழிகளும், நரசிம்ம ராவுக்கு 9 மொழிகளும், டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 11 மொழிகளும் தெரியும். ஆகவே ஆரம்பத்தில் இருந்து ஹிந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: