Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் பின்னணி மறைக்கப்பட்டவை

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் – பதவியை தூக்கி எரிந்த மத்திய அமைச்சர்… பாஜக கூட்டணியில் பிளவு

நேற்று (18-09-2020) அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகவும் பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஞ்சாபை சேர்ந்த சிரோமனி அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

“நான் விவசாயிகளுக்கு மகளாகவும், தோழியாகவும் இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்று விளக்கம் அளித்துள்ள அவர், பா.ஜ.க. அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சட்டங்கள் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அகாலி தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகவும் தயார் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. வின் நெருங்கிய நட்பு கட்சியாகவும் சீக்கிய கட்சியாகவும் உள்ள அகாலி தளத்தின் இந்த முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதே போல் இந்த 3 சட்டங்களால் பா.ஜ.க. வின் இரும்புக்கோட்டையாக கருதப்படும் இந்தி பேசும் வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தன்னை எதிர்ப்பதற்கு யாருமில்லை என்ற மோடி அரசின் இறுமாப்பிற்கு அவர்களிலிருந்தே மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது. இரும்புக் கோட்டையில் ஓட்டை விழுந்திருக்குறது. இந்த வீழ்ச்சி தொடரும். பாஜக அரசு தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால், தன் பாசிசப் போக்கை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அது மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டங்களை சந்திக்க வேண்டியது வரும்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: