Newsu Tamil
கல்வி மக்கள் மறைக்கப்பட்டவை

நீட் தேர்வை எதிர்த்து 3-வது நாளாக 6 பேர் உண்ணாவிரதம்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால் நடத்தப்பட்டது.

மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வை கொண்டு வந்த காரணத்தால் மருத்துவ கனவோடு படிப்பைத் தொடர்ந்த மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு நேரத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டதால், தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழ்நாட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் பாதை அமைப்பினர் தங்கள் அலுவலக வளாகத்தில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சந்திரமோகன், காசிநாதன் துரை, அரவிந்த், கீதா, அருணா, தமிழ்ச்செல்வி ஆகிய 6 பேரும் உணவு, தண்ணீர் அருந்தாமல் 3 வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். நீட் தேர்வை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: