Newsu Tamil
கல்வி தமிழ்நாடு செய்திகள்

100% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இருப்பதால் ஆன்லைன் தேர்வு நடக்கும் – அண்ணா பல்கலை.

100% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இருப்பதால் ஆன்லைனில் தேர்வு நடப்பது உறுதி அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகமும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த முடிவு செய்து உயர்கல்வித்துறையிடம் அனுமதி பெற்றது.

கடந்த 14ம் தேதி அண்ணா பல்கலைக்கழக தரப்பில் வெளியிட்ட தகவலில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஆன்லைன் முறையில், ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும், என கூறப்பட்டது.

40 கேள்விகள் Multiple choice question ஆக கேட்கப்படும் என்றும், அதில் 80% (30 கேள்விகளுக்கு மேல்) மாணவர்கள் பதிலளிக்க வேண்டும், எனவும் கூறப்பட்டது. ஒரு நாளைக்கு 4 சுற்றுகளாக தேர்வு நடைபெறும். (காலை 10-11, 12-1, 2-3, மாலை4-5). இதற்காக பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போன், லேப்டாப், வெப்கேமிரா வசதியுடன் தயாராக இருக்க வேண்டும், எனவும் வரும் 24 முதல் 29ம் தேதி வரை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்பட்டால் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் தேர்வை தேர்வில் கலந்து கொள்வது சாத்தியமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

மேலும், கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்து, நான்கு பதிலிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமமாணவர்கள் Objective type) தேர்வு இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாது என்றும், மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள இயலும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேர்வின்போது செல்போன் கேமரா மூலம் மாணவர்களை கண்காணிக்க இயலும் என்றும், மாணவர்கள் வேறொரு இணைய தள பக்கத்தில், பதிலை தேட முடியாதபடி, தேர்வுக்கான இணையதளம் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: