Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள்

இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி… மாநில மொழிகளுக்கு வாய்ப்பு இல்லையாம்

இரு மொழிகளை தவிர மற்ற மொழிகள் அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் ம.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வைகோ இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.