Newsu Tamil
அரசியல் குற்றம் மறைக்கப்பட்டவை

கர்நாடக போதை வியாபாரிக்கு இனிப்பு ஊட்டி விடும் பா.ஜ.க. அமைச்சர்

கன்னட திரையுலகில் போதைப் பொருட்கள் வினியோகம் செய்துவந்த முக்கிய குற்றவாளி ராகுல் பாஜக அமைச்சர் ஆர் அசோக் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முன்னணி நடிகையான ராகினி சஞ்சனா உள்ளிட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ராகுல் கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோக் உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது வெளியாகி உள்ள புகைப்படங்களில் அமைச்சர் அசோக் ராகுலுக்கு இனிப்பு வழங்கும் புகைப்படமும் ராகுல் அமைச்சருக்கு இனிப்பு வழங்கும் புகைப்படமும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கு ராகுலை தெரியவே தெரியாது என்று அமைச்சர் அசோக் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே முக்கிய குற்றவாளியான ராகுலுடன் அமைச்சரின் புகைப்படம் வெளியாகி உள்ளதால் அமைச்சரிடம் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சியான காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.