Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள்

பெங்களூரு ரயில் நிலையத்தில் ஹிந்தி போர்டுகள் உடைப்பு

நேற்று தேசிய அளவில் இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பல இடங்களில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.

பெங்களூருவில் உள்ள சங்கொலி ராயண்ணா கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பு சேர்ந்த சுமார் 15 பேர் உடைத்து எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்தி மொழியை திணிக்காதே கன்னட மொழியை அழைக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிடும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.