Newsu Tamil
அறிவியல் இந்திய செய்திகள் கொரோனா

என்ன செய்வதென்றே தெரியவில்லை – புலம்பும் கேரள மருத்துவர்கள்

கேரளத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கேரள மருத்துவர்கள் சங்கம் விரக்தியுடன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அது, கொரோனா மீதான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா தொற்று குணமடைய நாங்கள் கொடுக்கும் சிகிச்சை எதுவும் முறைப்படியானது அல்ல. அது அலோபதியானாலும் சித்த, ஆயூர்வேதாவானாலும் அவை வழிமுறைப்படி கையாளப்பட்ட சிகிச்சைகள் அல்ல.

உலகின் பல பாகங்களில் இருந்தும் கொரனாவை அழிக்க மக்கள் கையாளும் கை வைத்தியம் ஆனாலும் கூட அவற்றை நாங்கள் முயன்று பார்க்கிறோம். இதில் தடுப்பூசியும் பிளாஸ்மா தெரபியும் கூட அடக்கம். மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்புகள் அனுப்பும் புரோட்டோகால்களுக்கு இணங்கவே நாங்கள் சிகிச்சை செய்கிறோம் என கேரள மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அதாவது அவங்க என்ன சொல்லுறாங்கன்னா, கொரனாவுக்கு இது தான் மருந்து, இது தான் சிகிச்சை என ஒன்றும் இல்லை, இதற்கு முன் இப்படியானதொரு பேரழிவு நோயினை இவ்வுலகில் காணாத நிலையில் முறைப்படியான சிகிச்சை இது, மருந்து இது என மருந்துவர்களாகிய எங்களுக்கே தெரியாது.

சுகாதார கவுன்சில்களின் அறிவுரைப்படி அவர்கள் பரிந்துரை செய்யும் முறைகளை நாங்கள் முயன்று பார்க்கிறோம். ஏதோ ஒரு பொருளில் இதற்கான நிவாரணம் இருந்து விடாதா என்பதே எங்களது பேராவல்.” என வெளிப்படையாக கூறுகின்றனர்.

இதுதான் தற்போதைய உண்மை நிலவரம். ஆனால், இந்த குழப்பங்களையும் சோதனை முயற்சியையும் மக்கள் குறையாக எண்ணி சந்தேக சதி கோட்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுகின்றனர். அப்பாவி மக்களும் அதையே நம்பி பேசித்திரிகின்றனர்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: