Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பின்னணி

தமிழ்நாட்டில் மீண்டும் பாஜகவின் ரதயாத்திரை… சத்யராஜ் மகள் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும் வரும் செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க ரத யாத்திரை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் இருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணராக உள்ள இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.