Newsu Tamil
அரசியல் ஊடக விமர்சனம் தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

“இந்தி தெரியாது போடா” டி சர்ட் அணிந்த பத்திரிகையாளர் – தந்தி டிவிக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார். அவர் அணிந்திருந்த “டி சர்டில் இந்தி தெரியாது போடா” – என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

இது பற்றி நெறியாளரும் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருந்தார். அதற்கு ராதாகிருஷ்ணன் விளக்கம் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மத்திய பாஜக அரசை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தந்தி டிவி நிர்வாகத்தை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியை யூ ட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பிய இருந்த நிலையில், நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.