Newsu Tamil
குற்றம் கொரோனா தமிழ்நாடு செய்திகள் மக்கள்

கொரோனாவால் வேலை இழந்து கஞ்சா விற்ற இஞ்சினியர்கள் கைது

சென்னை குரோம்பேட்டை அருகே சிட்லப்பாக்கத்தை சோ்ந்தவா் சரண்ராம்(25). சாப்ட்வோ் இன்ஜினியரான இவா், ஊரடங்கால் ஆட்குறைப்பு காரணமாக சமீபத்தில் வேலை இழந்தவா். இவருடைய நண்பா் வண்டலூரை சோ்ந்த ஆலன்(25). இவரும் அதே காரணத்தால் வேலை இழந்த சாப்ட்வோ் இன்ஜினியா் ஆவார். இருவரின் நண்பா் சென்னை விருகம்பாக்கத்தை சோ்ந்த மனோஜ்(27).இவா் சென்னையில் ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் அதிகாரியாக பணியாற்றி வந்தவா். இவரும் ஊரடங்கால் சமீபத்தில் வேலை இழந்தார்.

நல்ல சம்பளத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்தவா்கள், வேலை இழப்பால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனா். அப்போது கஞ்சா போதைப்பொருள் கடத்தி வந்து மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று சிலா் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டை ராதாநகா் அருகே சிட்லப்பாக்கம் போலீசாா் வாகன தனிக்கை செய்தபோது, விருகம்பாக்கத்தை சோ்ந்த மனோஜ் பைக்கை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது பைக் சீட்டிற்கு அடியில் கஞ்சா பாா்சல்கள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து சிட்லப்பாக்கத்தை சோ்ந்த சரண்ராம், வண்டலூா் ஆலன் ஆகியோா் வீடுகளிலும் சோதனை நடத்தினா். 3 பேரிடமிருந்தும் மொதம் 2.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் ராயல் என்பீல்டு, R15 ஆகிய விலை உயா்ந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீசாா் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சமுதாயத்தில் கவுரவமாக உயா் பதவியில் இருந்த இளைஞா்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கு கொடுமையால் வேலை இழந்து கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்டு கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.