Newsu Tamil
இந்திய செய்திகள் பின்னணி விளையாட்டு வைரல்

பப்ஜி கேமுக்கு தடை விதித்தது இந்தியா

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாளடைவில் பலரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினர்.
இதனையடுத்து, பல்வேறு உலக நாடுகள் பப்ஜி விளையாட்டுக்கு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பப்ஜிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தென்கொரிய நிறுவனமான பப்ஜியை இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

நாளொன்றுக்கு 3.3 பேர் இந்தியாவில் பப்ஜி விளையாடுகின்றனர். உலகளவில் பப்ஜி விளையாடுபவர்களில் 24% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையாக பப்ஜியை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.