Newsu Tamil
உலக செய்திகள்

சவூதி வான்வெளியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலையீட்டால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இஸ்ரேலின் தூதரகம் அமீரகத்தில் திறக்கப்பட்டது. மேலும் இருநாடுகள் இடையே விமான போக்குவரத்தை தொடங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருநாடுகளிடையே விமான போக்குவரத்துக்கு சவூதி அரேபிய வான்வெளியை பயன்படுத்த வேண்டும்.

எனவே சவூதி அரேபியா தங்கள் நாட்டு வான்வெளியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க அனுமதிக்குமாறு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அமீரகத்தின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் விமானங்களுக்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பயணிகளுக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கியதாக அபுதாபியின் எத்திஹாத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

சவூதியின் அனுமதி குறித்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலிய விமானங்கள் உட்பட எந்தவொரு விமான நிறுவனமும் இப்போது சவூதி வான்வெளி வழியாக நேரடியாக அமீரகத்துக்கு பறக்க முடியும் என்றும், அது ஆசியாவின் பிற நாடுகளுக்கு செல்லும் விமான பயண நேரத்தை குறைக்கும்” என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீன் காரணமாக சவூதி வான்வெளியில் இஸ்ரேலிய விமானங்கள் பறக்க பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு மட்டும் சவூதி அனுமதியளித்து இருந்தது. இந்த நிலையில், தற்போதைய இந்த அனுமதியின் மூலம், இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்துக்கி சவூதி அரேபியாவும் தயாராக இருப்பதையே காட்டுகிறது.

பாலஸ்தீன் நாட்டை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக தேசத்தை கட்டமைத்து லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்களை மதம் காரணமாக கொன்று குவித்து வருன் இஸ்ரேலுடன் அமீரகம் அமைதி ஒப்பந்தம் செய்வது கண்டிக்கத்தக்கது என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.