Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பின்னணி மக்கள்

ஏழைகளுக்கு ஏமாற்றம் தந்த எடப்பாடியின் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுபாடுகள் அற்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும், வெளிமாவட்டங்களுக்கு பேருந்து பயணம் கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது. அதே போல் ரயில் போக்குவரத்தும் 15ம் தேதி வரை இயங்காது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் ரத்து செய்யப்பட்டாலும் பிற மாவட்டங்களுக்கான பொதுப்போக்குவரத்து தடை நீடிப்பது முரணாக உள்ளது. சொந்த வாகனம் உள்ளவர்கள் இ பாஸ் பெறாமல் எளிதில் பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியும். அல்லது பணபலம் படைத்தவர்கள் டாக்ஸிக்கு ஆயிரக்கணக்கில் செலுத்தி பயணிக்கலாம். ஆனால், சொந்த வாகனம் இல்லாத ஏழைகள் எப்படி மாவட்டம் தாண்டி பயணிக்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது மாவட்ட எல்லைகள் மிகவும் சுருக்கப்பட்டுள்ளன. 25கிமீ இடைவெளிக்குள் இரண்டு மூன்று மாவட்டங்கள் அமைந்துள்ளன உதாரணமாக கோவை to திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோட்டிலிருந்து ஊட்டி
போன்ற அருகாமையில உள்ள ஊர்களுக்கு சொந்த வாகனம் இல்லாதவர்கள் எப்படி பயணம் செய்ய முடியும்? பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியும்,இ-பாஸ் ரத்து செய்தும் மாவட்டம் தாண்டி பயணிக்க முடியாது என்பது கதவை திறந்துவிட்டு காலை கட்டியது போன்றுள்ளது.