Newsu Tamil
இந்திய செய்திகள் குற்றம் விளையாட்டு

சென்னை வீரர் ரெய்னாவின் மாமா படுகொலை… ஐ.பி.எல்-இல் விளையாட மாட்டார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடைய தந்தையின் சகோதரி ஆஷா தேவி. இவர் மற்றும் இவரது கணவர் அசோக் குமார் (வயது 58), இவர்களது மகன்கள் கௌசல் குமார், அபின் குமார் மற்றும் ரெய்னாவின் 80 வயது பாட்டி மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள தரியால் கிராமத்தில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலில் அவரது மாமா அசோக் குமார் உயிரிழந்தார். இவர் கனது குடும்பத்தினருடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. ‘காலே கச்சேவாலா’ என்ற கொள்ளை கும்பல் தூக்கத்தில் இருந்த குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.

இதில் ரெய்னாவின் அத்தை, பாட்டி ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய உறவினர்கள் என்பதை அறிந்த பொலிசார் தங்கள் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர். போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண காவல்துறையினர் மோப்ப நாய் உதவியையும் பெற்றுள்ளனர், ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் இந்தியா திரும்ப இருப்பதாகவும் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.