Newsu Tamil
உலக செய்திகள் மறைக்கப்பட்டவை

அம்பலமான இஸ்ரேலின் அசிங்கம்… பிரதமர் பதவி விலகக்கோரி 10,000 பெண்கள் போராட்டம்

இஸ்ரேலின் ரெட்ஸீ ரிசார்ட் என்ற ஹோட்டலில் பணக்கார இளைஞர்கள் 30 பேர் வரிசையில் நின்று 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இஸ்ரேல் முழுவதும் இந்த சம்பவத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆஙாங்கே பெண்கள் அரை நிர்வாணமாக நின்று குற்றவாளிகளை தண்டிக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிந்து இதுவரை பெரும்பான்மையை நிரூபிக்காத பிரதமர் நேதன்யாகு இஸ்ரேல் பெண்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், பணக்காரர்களுக்காக ஆட்சி செய்வதாகவும் கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை அடுத்து நேற்று பிரதமர் வீட்டின் முன் திரண்ட 10,000க்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்திடக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

ஹஸ்டிகேரியன் மகளிர் உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி ஐந்து இஸ்ரேலிய பெண்களில் ஒருவர் கற்பழிக்கப்படுகிறார் என தெரியவந்துள்ளது. நாகரீகத்தின் உச்சத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்கிற நாடுகளில் தான் பெண்ணடிமைத்தனத்தின் கோரமுகம் பல்லிளிக்கிறது.

சர்வதேசத்தையும் உளவு பார்க்கும் இஸ்ரேல் தன் நாட்டில் நடப்பதை மட்டும் பரம ரகசியமாக வைத்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த சம்பவம் வெளிவந்துள்ளதால் இஸ்ரேலின் மறுபக்கம் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதுபல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேலில் நாள்தோறும் பெரும்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் அரசு மீது அந்நாட்டு மக்கள் முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிட்டதையே இது காட்டுகிறது.