Newsu Tamil
Headlines இந்திய செய்திகள் பொருளாதாரம் மறைக்கப்பட்டவை

எல்லாப் புகழும் கொரோனாவுக்கே… எஸ்கேப் ஆகும் மத்திய பாஜக அரசு

இது கடந்த 16 வருடங்களுக்கான ஜிடிபி வளர்ச்சி டேட்டா. இதில் பத்தாண்டுகள் காங்கிரசு ஆண்டது. ஆறு ஆண்டுகள் பாஜக ஆண்டது, இனி நான்காண்டுகள் ஆளும். 2004 – 2014 காங்கிரசு ஆட்சியில் மூன்று முறை ஜிடிபி நெகடிவாக கீழே போனது. அதில் 2007 – 2008 என்பது உலக பொருளாதார சிக்கல். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் 2011 மட்டுமே.

ஆனால் பாஜக ஆட்சியில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் (2017, 2018, 2019) நெகடிவ். கொரோனா புண்ணியத்தில் 2020-21-ம் படு பாதாளத்துக்கு போலாம்.

3 out of 10 – காங்கிரசு – 30%
3 out of 6 – பாஜக – 50%

கொரோனா கணக்கில் அடுத்த 2 – 3 வருடங்கள் தேறாது. ஆக ஆள தகுதியற்ற ஒரு கூட்டம் தான் நம்மை ஆண்டு கொண்டும், அதிகாரம் செய்து கொண்டும் இருக்கிறது என்பதை உணர்வோம். இவர்களோடு சேர்ந்து தான் குப்பை கொட்ட போகிறோம் என்றால், நாரோடு சேர்ந்த பூவும் நாறும் என்கிற வகையில் நாமும் நாறடிக்க படுவோம்.

ஆக பத்தாண்டுகளில், உலக பொருளாதார சிக்கலை சமாளித்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற காங்கிரசு அரசு வலிமையானதா (அ) 56” அகல மார்பினை வைத்து கொண்டு உதார் விட்டு கொண்டு சுற்றி வந்து, ஆறு ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளை நெகடிவ் வளர்ச்சியாக கீழே தள்ளிய பாஜக அரசு வலிமையானதா ?

மண்டைக்குள் கொசு அளவிற்கு மூளை இருப்பவர்கள் கூட பாஜகவின் அராஜக வக்கற்ற அரசினை ஆதரிக்க மாட்டார்கள்.

– நரேன் ராஜகோபாலன்

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: