Newsu Tamil
குற்றம் தமிழ்நாடு செய்திகள்

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் போலீஸ் கொரோனாவால் பலி

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை. இவர் தன்னை கைது செய்யும்போது தான் எதுவும் செய்யவில்லை என்றும் தன்னையும் இந்த பிரச்சனையில் சிக்க வைப்பதாகவும் அழுது புலம்பி சாபம் விட்டவர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் பால்துரை அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கை, கால்கள் செயலிழந்து சுய நினைவற்ற நிலையில் உள்ள அவரை காப்பாற்ற உதவ வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் புகார் மனு அளித்தார்.

புகாரை தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து ஐ.சி.யூ.பிரிவில் சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்நிலையில், அவர் சற்றுமுன்பு உயிரிழந்துள்ளார்.