Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பொருளாதாரம்

தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு – தமிழகமெங்கும் போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பல்லவன் இல்லம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தற்சார்பு பொருளாதாரம் என்ற பெயரில் பெரும்பாலான தொழில்களில் அன்னிய மூதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதை கண்டித்தும்,
வேலை நீக்கம், சம்பள வெட்டு, அவுட்சோர்சிங் போன்றவற்றை கைவிட வேண்டியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: