Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 45 வயது பாஜக பிரமுகர்

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிஜேபியை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ந்தேதி வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக உறுப்பினர் சீனிவாசன் (45) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவி பெற்றோரிடம் இன்று தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.