Newsu Tamil
இந்திய செய்திகள் சரியா? தவறா?

கபீல் கான் தலைமையில் பாபர் மருத்துவமனை என வதந்தி… வக்ப் வாரியம் போலீசில் புகார்

பரவும் செய்தி:

நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் – ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர்
மருத்துவமனை கட்டி ,தலைமை மருத்துவராக டாக்டர் கபீல்கானை நியமனம் செய்ய வாரியம் முடிவு…

AIIMS மருத்தவ மனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு…!!

(அதிகாரப்பூர்வமான செய்தியா என்று தெரியல. ஒருவேளை உண்மையாக இருந்தால் நல்ல முடிவு இது)

சம்பந்தப்பட்ட நபர் இது அதிகாரப்பூர்வமான செய்தியா என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அதை உண்மை என்று நம்பி கீழுள்ள வரிகள் இல்லாமல் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை தன்மை:

விளக்கம்:

இதுகுறித்து தெரிவித்துள்ள மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன், “சமூக வலைதளங்களில் சிலர் பொறுப்பின்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது லக்னோ காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். ஏற்கனவே முடிவு செய்தபடி, ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் மசூதி, சமுதாயக் உணவுக்கூடத்துடன், மருத்துவமனை அமைக்கப்படும்.” என்றார்.

முடிவுரை:

இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவும் தகவலில், மருத்துவமனை கட்டப்படும் என்ற தகவல் உண்மை என்பதும், அதில் கபீல் கானை இயக்குநராக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பொய் என்பதும் உறுதியாகிறது.