Newsu Tamil
இந்திய செய்திகள்

கேரளாவில் 2 துண்டான விமானம்… உயிரிழப்பு 18-ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கரிப்பூர் விமான நிலையத்துக்கு 191 பேருடன் நேற்றிரவு 7:15 மணிக்கு ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 2 துண்டுகளானது.

விமானத்தில் பயணத்தவர்கள் உடனுக்குடன் மீட்கப்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து துபாயில் சிக்கி இருந்தவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள், 10 குழந்தைகள் உட்பட 191 பேர் இதில் பயணித்துள்ளனர்.

விமானம் தீப்பிடிக்காததால் பலர் உயிர் தப்பியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மலப்புரம், கோழிக்கோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 5 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.