Newsu Tamil
கொரோனா

கொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.!

சீனாவில் உகான் நகரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் உகான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு இயக்குனரான பெங் ஜியோங் அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனாவில் இருந்து குணமான 59 வயதுக்கு உட்பட்ட 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இந்த ஆய்வில் அவர்களில் 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், நுரையீரலில் நடக்கும் சுவாச பரிமாற்றங்கள் நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவரின் செயல் திறனை விட மிகக் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.