Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

அதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த நூற்றாண்டு வரலாற்று சின்னமான பாபர் மசூதியை அராஜமாக இடித்து தரைமட்டமாக்கினர் ஆர்.எஸ்.எஸ். சங்க்பரிவார பயங்கரவாத கும்பல். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் இறுதியாக உச்சநீதிமன்றம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், கோரோனா ஊரடங்கிற்கு மத்தியில் நேற்று ராமர் கோவிலுக்கான பூமிப்பூஜையை பிரதமர் மோடி அயோத்தியில் செய்தார். இதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கிடையே இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியிறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும், இணையம் தொலைத்தொடர்பு தடையை நீக்க வேண்டும், சிறையிலடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், சிவில் பிரச்சினையை கிரிமினல் குற்றமாக்கி, முஸ்லிம் ஆண்களை சிறைப்படுத்தும் சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும் இந்த போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவை

 

ராமநாதபுரம்
சென்னை
அதிராம்பட்டினம், தஞ்சாவூர்

 

 

 

சிவகாசி
இளையான்குடி, சிவகங்கை
புதுச்சேரி
திருவள்ளூர்
ராயபுரம், சென்னை
நாகர்கோவில்
தென்காசி

 

 

 

நீலகிரி
புதுக்கோட்டை