Newsu Tamil
குற்றம் தமிழ்நாடு செய்திகள் மக்கள் வைரல்

தூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் (15) என்ற பள்ளி மாணவன் மிட்டூர் அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறான்.

இவனது சக நண்பவர்கள் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். இதனை கண்டு தானும் பப்ஜி விளையாட ஆசைப்பட்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளான்.

விவசாய கூலித்தொழிலாளியான பெற்றோர்களால் செல்போன் வாங்கி தரமுடியாத நிலை இருத்துள்ளது. இதனால் நண்பர்களிடம் செல்போன் கேட்டதாக தெரிகிறது. தினேஷ்குமார் விளையாட யாரும் செல்போன் தராததால் மனமுடைந்த தினேஷ்குமார், தாயின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலிசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகச சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.