Newsu Tamil
உலக செய்திகள்

சில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளதனர். (இந்திய நேரம் அதிகாலை 5 மணி நிலவரப்படி

விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில் விபத்தில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் 5,000 பேருக்கு மேல் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. சிறிய வெடிவிபத்தை தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தால் பல அடி உயரத்துக்கு புகைப்படலம் சூழ்ந்தது.

இதன் அதிர்வு காரணமாக துரைமுகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்கள் இடிந்தன. பல மைல் தூரம் வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டதால் கண்ணாடி சுவர்கள் உடைந்தன. 250 கி.மீ. தொலைவில் உள்ள அண்டை நாடான சைப்ரஸ் வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இந்த நில நடுக்கத்தால் சில வினாடிகளில் பெய்ரூட் நகரம் உருக்குலைந்தது

லெபனான் பிரதமர் ஹஸ்ஸான் தியாப் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய அவசர உரையில் துறைமுகத்தின் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 அமோநியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்தால் இத்தகைய விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இதன் பின்னணியின் சதி இருந்தது அறியப்பட்டால் அதை செய்தவர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

லெபனான் நாட்டுக்கு உதவ தயாராக இருப்பதாக கனடா, இங்கிலாந்து, பிரான்சு, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

வெடிவிபத்து குறித்து செய்தி அறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் மேக்ரூன், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்டௌஸ் ஆகியோர் லெபனானுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.