Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

நாகை எம்.பி. செல்வராசுக்கு கொரோனா… ஒரே நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு கொரானா தொற்று உறுது செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி நாகையில் நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது

தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கம் சிறப்பு அலுவலர் லலிதா, தஞ்சாவூர் காவல் சரக DIG ரூபேஷ்குமார் மீனா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், உள்ளிட்ட காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மீனவர் பிரதிநிதிகள், வணிகர் சங்கத்தினர்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு கொரானா தொற்று இன்று உறுதியாகி உள்ளது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.