Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா உறுதி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்த நிலையில், தமிழக ஆளநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் பன்வாரிலாலுக்கும் கொரோனா உறுதியானது. அவர் ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.