Newsu Tamil
Headlines அரசியல் இந்திய செய்திகள்

அமித்ஷாவையும் விட்டுவைக்காத கொரோனா

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, தனக்கு அறிகுறி இருந்த காரணத்தால் சோதனை செய்ததாகவும், அப்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் கூறினார். மருத்துவர்கள் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.