Newsu Tamil
சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

மாரிதாசுக்கு எதிராக நியூஸ் 18 வழக்கு… வாயை மூட சொன்ன ஐகோர்ட்

மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையில் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக நியூஸ் 18 குற்றம்சாட்டி இருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

சமூக வலைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது என்றும் நீதிபதி கண்டித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன் மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாசிடம் ₹1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.