Newsu Tamil
இந்திய செய்திகள் வீடியோ வைரல்

யானை முன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்… நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து அவ்வபோது யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில சுன்டிகொப்பா வனப் பகுதியில் இருந்து கூட்டமாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தது.

கூட்டமாக வந்த யானைகளில் ஒரு யானை பிரிந்து கிராமத்தின் தெருவுக்குள் நுழைந்து மக்களை விரட்டத் தொடங்கியது. யானை ஓடி வருவதைக் கண்டு ஊர்மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில் புனித் என்ற இளைஞர் மட்டும் யானை அருகில் வரும்வரை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

கிராம மக்களை நோக்கி ஓடி வந்த யானை செல்பி எடுத்துக்கொண்ட இளைஞருக்கு சற்று தொலைவில் முன்னாலிருந்த பாதையில் திரும்பியதால் நூலிழையில் அந்த இளைஞர் யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளார். இந்தக் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வன விலங்குகளால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இளைஞர்களின் இந்த செயல்பாடு வேதனை அளிப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Visuals sent on whatsapp sir..

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: