Newsu Tamil
உலக செய்திகள்

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள்… வெடித்தது போராட்டம்

இஸ்ரேலில் அந்த நாட்டு மக்கள் பிரதமருக்கு எதிராக போராடி வருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முடக்க நிலையால் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.

Source: AFP

இந்நிலையில் டெல் அவிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேலை இல்லாதோர், சுயதொழில் செய்வோர், தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் என பல தரப்பினரும் ஒன்று திரண்டனர்.

தொழிலாளர் மற்றும் தொழில் முனைவோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை நெதன்யாகு கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். ஆனாலும், பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பிரதமரின் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: AFP

ஏற்கனவே இஸ்ரேலின் பாலஸ்தீன மேற்கு கரை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அந்த நாட்டு மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் தற்போதைய போராட்டம் நீடித்திருப்பது இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் இன்னும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக   பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: AFP