Newsu Tamil
குற்றம் தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

முகக்கவசம் அணியாததால் போலீஸ் கொலைவெறித் தாக்குதல்… இளைஞரின் கிட்னி செயலிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஹபீப் முகமது (வயது 32). இவர் கடந்த ஜூன்.09-ம் தேதி அன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாகவும், முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். இதன் காரணமாக, ஹபீப் முகமதுவை கைது செய்த போலீசார் ஆறுமுகநேரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு போலீசாரால் கடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் ஹபீப் முகமது.

இந்த தாக்குதலை அடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹபீப் முகமது அன்றைய தினமே காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்பட்டன என்பதனை தெரிவித்து சிகிச்சை பெற்றுள்ளார். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் விபத்துக்கள் பதிவேட்டில் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் 4 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹபீப் கூறியது பதிவாகியுள்ளது.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஹபீப் முகமது குடும்பத்தினரை மிரட்டி மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாத சூழலை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் ஹபீப் முகமதுவை அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ் திரும்பி சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஹபீப் முகமது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) தனது ஏழாவது DIALYSIS சிகிச்சைக்கு ஹபீப் முஹம்மது – திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு தடுமாறி செல்வதை காணமுடிந்தது என செய்தி வெளியிட்டுள்ள நாளிதழ், ஹபீப் முஹம்மது உடைய பேட்டியினையும் வெளியிட்டுள்ளது. TIMES OF INDIA நிருபருக்கு பேட்டி அளித்துள்ள ஹபீப் முஹம்மது தெரிவித்ததாவது –

“குத்துக்கல் தெருவில் – கோவிட்-19 காரணமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாக, முகக்கவசம் அணியாமல், நான் சென்றேன். அது தான் எனக்கு குறுகிய வழி. நான் புகைபிடித்திருந்தேன். அங்கு இரண்டு பெண் காவலர்கள் இருந்தார்கள். நான் அவர்கள் மீது புகை ஊதியதாக கூறினார்கள். ஆனால் அது உண்மை இல்லை.”

10:45 மணியளவில் ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஹபீப் முஹம்மது, அங்கு உடம்பின் கீழ் பின்புறம், கால்கள் என பல இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டார். அடுத்த தினம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஹபீப் முஹம்மது, தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்பட்டன என்பதனை தெரிவித்துள்ளார். காயல்பட்டினம் அரசு மருத்துவமனை விபத்துக்கள் பதிவேடு (ACCIDENT REGISTER) – நான்கு பேர், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் தாக்கியதாக கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TIMES OF INDIA நாளிதழுக்கு பேட்டியளித்த ஹபீப் முஹம்மது உடைய தந்தை கதீப் முஹைதீன் தம்பி, “மருத்துவ மனைக்கு நாங்கள் சென்ற சில நிமிடங்களில் – அங்கு காவலர்கள் வந்து, எங்களுக்கு தொல்லை கொடுத்து, நாங்கள் மருத்துவ உதவி பெறாமல் வீடு செல்லும் சூழலை உருவாக்கினர்” என்றார்.

ஹபீப் முஹம்மதினை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் – அவரை அழைத்து செல்லாமல், காலியாக ஆம்புலன்ஸ் திரும்பி சென்றது என்றும் தெரிகிறது. ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததினால் ஏற்பட்ட காயம் என கூறி, ஹபீப் முஹம்மது – திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னர், அனுமதிக்கப்பட்டார். அவரின் சிறுநீரின் அளவும் குறைந்தது; நிறமும் மாறியிருந்தது.

இதுவரை ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் – அவரின் குடும்பத்தினர் செலவு செய்துள்ளதாக TIMES OF INDIA தெரிவிக்கிறது. ஆறுமுகநேரி காவல்நிலையம் சம்பவத்தையும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்ததாக கூறப்படும் மேலொரு காவலில் மரணம் சம்பவம் குறித்தும் விசாரிக்க இரண்டு துணை கண்காணிப்பாளர் (DSP) தகுதியில் உள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் IPS, TIMES OF INDIA நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

அவருக்கு தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்யும் நிலைக்கு அவர் சென்றுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினர் லட்சங்களை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க துணை கண்காணிப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் தொடர் மிரட்டலுக்கு அஞ்சி ஹபீப் முகமது குடும்பத்தினர் புகார் தெரிவிக்க அஞ்சியுள்ளனர். தமிழ் ஊடகங்கள் எதிலும் இந்த செய்தி வெளிவரவில்லை. இந்த நிலையில், ஹபீப் முகமதுக்கு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்தசெய்தியை (ஜூன்.27) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “சாத்தான்குளம் சம்பவமும், ஆறுமுகநேரி காவல்நிலைய சம்பவமும் கொரோனா நடவடிக்கை பேரில் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட அடாவடி அதிகார துஷ்பிரயோகமாகும்.

சாதாரண எச்சரிக்கை விடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு எதிரான பொதுமக்களின் கேள்விகளை கிரிமினல் குற்றமாகக் கருதியும், ஊரடங்கு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீதும் மனித உரிமைக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதலை தொடுத்த காரணத்தால், சாத்தான்குளத்தில் அப்பாவிகள் இருவரின் உயிரைப் பறித்துள்ளனர். அதேபோல் காயல்பட்டினத்தில் அப்பாவி ஒருவரை நடைபிணமாக்கியுள்ளனர்.

காயல்பட்டினம் இளைஞர் மீதான தாக்குதல் குறித்து மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், ஹபீப் முகமது மீது தாக்குதல் நடத்திய காவல்நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வழக்கமாகவே அனைவரையும் ஒருமையில் பேசியும், மத அடையாளங்களை குறிப்பிட்டு முஸ்லிம் விரோத போக்குடன் நடந்துகொள்பவர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனடிப்படையிலேயே ஹபீப் முகமது மீது இரண்டு அதிகாரிகளும் மூன்று காவலர்களும் இணைந்து மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆகவே, தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதலில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சாந்தி, துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் 3 காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஹபீப் முகமதுவின் அனைத்துவிதமான மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்பதோடு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.