Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள்

வேலூர் இனி வீலூர் அல்ல… கோவை மக்களுக்கும் ஆறுதலான செய்தி!

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக COIMBATORE என்று உள்ளதை இனி KOYAMPUTHTHOOR எனவும், VELLORE என்று உள்ளதை VEELOOR என்றும் மாற்றப்பட்டது. இது சமூக வலைதளங்களில் நகைப்புக்கு உள்ளானது. இதில் பிழை இருப்பதாகவும், தமிழக அரசு அரசாணையை திரும்பப்பெற வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழில் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை திரும்பப் பெறப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் நிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.