Newsu Tamil
ஆரோக்கியம் தமிழ்நாடு செய்திகள்

அரசின் மிரட்டலால் முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்..!

காலம் முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவமனையில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 வது நாளாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராடமானது, விடிய விடிய
நடைபெற்றது.இந்த நிலையில் நேற்று செய்தியாளர்ளை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் இன்று காலை பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்தில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.போராட்டத்தில் இறங்கிய 16,475 பேரில் 2,523 பேர் மட்டுமே பணிக்கு திரும்பவில்லை என்றும் அவர்கள் பணிக்குத் திரும்பிட வேண்டுகோள் விடுப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். போராட்டத்தை கைவிட்டு வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் எனக் கூறிய அவர், சங்கரன்கோவில், கடலூர், திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். முதல்வர் 2-3 நாட்களுக்குள் தங்களை அழைத்துப்பேசுவார் என நம்பியதாகவும், இவ்வளவு நாட்கள் போராட்டம் தொடரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் கூறிய அவர், முதல்வர் வாக்குறியதளித்தை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.