செல்வசூரன் படுகொலை: எங்கே போனார்கள் எச்.ராஜாவும், தமிழிசையும்?


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செல்வரசூன் (வயது22). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு (2018) செல்வரசூன் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ராஜசேகருக்கு காதல் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் செல்வரசூன், ராஜசேகர் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் தனியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று செல்வரசூன், அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து சமையல் செய்வதற்காக வயல் நத்தைகளை பிடித்து அவற்றை அதே பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ சேகர் அரிவாளால் செல்வரசூனின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனால் பதறி போன மகேந்திரன் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீசார் செல்வரசூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி


நியூசு பார்வை:

இந்த செல்வசூரன் படுகொலை தனிப்பட்ட முறையில் கால்புணர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது என தந்தி செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் இது சாதி வெறி காரணமாக எற்பட்டது என பேசப்பட்டு வருகிறது. தற்போது செல்வசூரன் கொலை சம்பவம் எதனால் ஏற்படுள்ளது என தீவிர விசாரணைக்கு பிறகு தான் உறுதியாக தெரியவரும்.

ஆனால் கடந்த வாரம் ராமலிங்கம் படுகொலை செய்யபட்ட போது இதே தந்தி செய்தி மற்றும் மற்ற ஊடகங்கள் இது மத காரணங்களால் ஏற்பட்டது என செய்தி வெளியிட்டார்கள். மேலும் ராமலிங்கம் படுகொலையின் போது H.ராஜா, தமிழிசை மற்றும் பாஜகவினர் இதை விமர்சித்து மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த செல்வசூரன் படுகொலையில் இவர்கள் மௌனம் காப்பது போல தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget