கிறிஸ்தவ மதபோதகர்களை தாக்கிய பாஜகவினர் சிறையில் அடைப்புகடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் பொதுமக்களிடம் ஆரோன்குமார்,  மார்க்ஸ்ட், அந்தோணி ஆகியோர்  கிறிஸ்தவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் முத்துவேல், பா.ஜ.க. மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல், பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் பொன்சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோன்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கடுமையாக தாக்கி, அவர்களை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று, அவர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை பூசி கீழே விழுந்து வணங்கும்படி துன்புறுத்தினர்.

அத்தோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து ஆரோன்குமார் அளித்த புகாரின் போரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget