திமுக vs அதிமுக vs அமமுக - திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. இதே போல் திருப்பரங்குன்றம் வேட்பாளர் ஏ.கே.போஸ் மரணத்தை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக உள்ளது. ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி ஜனவரி 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜனவரி 31ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 10ம் தேதியும், வேட்புமனு மீதான பரிசீலனை 11ம் தேதியும், வேட்புமனுவை 14ம் தேதி திரும்பப்பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget