ஆர்.எஸ்.எஸ் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளிக்கிறது - அமைச்சர் குற்றச்சாட்டு

அண்மையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் கோவிந்த் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டாக சேர்ந்து ஆயுத பயிற்சியளித்து வருவதாக குற்றம்சாட்டினார். வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தங்கள் தொண்டர்களுக்கு ஆயுதங்களை, வெடிகுண்டுகளை, அணு குண்டுகளாய் தயார் செய்யவும், அவற்றை வெடிக்க வைக்கவும் பாஜக பயிற்சியளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.


நியூசு பார்வை:

ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் எனவும், அவர்களை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளை, நக்சல்கள், மாவோயிஸ்டுகள் எனவும் சித்தரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பிரபல்யம் அடைவதற்காகவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைப்பதற்காகவும், தங்கள் வீடுகள் மீதே பெட்ரோல் குண்டு வீசி சிக்கிக்கொண்டதையும் அண்மையில் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், முசாபர் நகர் கலவரம், கோவை கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு, ஐதராபாத் மசூதி குண்டு வெடிப்பு, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் படுகொலை, தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்து ஊர்வலத்தின் போது கட்டவிழ்த்து விடப்படும் கலவரங்கள், அடிக்கடி அரங்கேறும் பசுப்படுகொலைகள் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, சிவசேனா, பஜ்ரங்தள், இந்து முன்னணி, ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன.

நிலை இவ்வாறு இருக்க, மத்திய பிரதேச அமைச்சர் கோவிந்தின் இந்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. தேசிய பாதுகாப்பு தொடர்புடையது. ஒருமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளிக்கிறது என ஒரு மாநில கேபினட் அமைச்சரே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறித்து இந்திய உள்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்கள் போல் பரவிக்கிடக்கும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்படுவது என்பது தேசத்தையே அச்சுறுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தீபாவளி பட்டாசு வைத்திருந்தவர்களை எல்லாம், தீவிரவாதி என சொல்லி கைது செய்யும் தேசிய புலனாய்வு முகமை மத்திய பிரதேச அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு செவி சாய்த்து அதன் படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஆதாரம்:https://zeenews.india.com/video/india/rss-training-people-to-make-atom-bomb-weapons-congress-minister-govind-singh-2172694.html

தன் வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது: http://www.dinakaran.com/News_detail.asp?Nid=337707

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget