ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #GoBackModi


மதுரை ரோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை நடைபெறவுள்ளது. மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் பங்கேற்பதற்காக நாளை மோடி தமிழகம் வரும் நிலையில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என திருமுருகன் காந்தி, வைகோ உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டர், பேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது தேசிய அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget