பூனையை SPEED POST செய்தவருக்கு அபராதம்


தைவானை சேர்ந்த யாங் என்ற நபர் தனது பூனையை அட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து தபால் மூலம், பான்சியாவ் பகுதியில் உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பி வைத்தார். தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு வீடியோவை வைத்து இந்த பூனையை அனுப்பிய நபரை விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்டது. இதனை அடுத்து அவருக்கு தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 60 ஆயிரம் நியூ தைவான் டாலர் அபராதம் விதித்தனர். 

அந்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக மேலும் 30 ஆயிரம் நியூ தைவான் டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தன்னால் பூனையை கவனிக்க முடியவில்லை என்றும், காலில் ஏற்பட்ட காயத்தால் பூனையால் நடக்க முடியவில்லை என்பதால் அதனை தபாலில் அனுப்பியதாக யாங் தெரிவித்துள்ளார். 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget