சிறந்த பினிஷர் என மீண்டும் நிரூபித்த தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தற்போது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, அடிலெய்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முஹம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
299 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கேப்டன் விராட் கோலி 104 ரன்களை குவித்து 39வது ஒருநாள் சதத்தை விளாசி அசத்தினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய முன்னாள் கேப்டன் தோனி 55 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார். முதல் போட்டியில் தோனி அதிக பந்துகளை வீணடித்ததால் தோல்வியை தழுவியதாக பலர் விமர்சித்த நிலையில், இந்த போட்டியில் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசி சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget