இனி லீவ் போட்டுட்டு எஸ்கேப் ஆக முடியாது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு வரும் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைந்து தொடு உணர் கருவி மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை 2019 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை வரும் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு இரண்டு என்று மொத்தமாக 15 ஆயிரத்து 452 ஆதார் எண்ணுடன் இணைந்த தொடு உணர் வருகைப்பதிவு கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget