Highlights

Highlights

நிர்பயா, ஸ்வாதியை தெரியும்... நந்தினியை நினைவிருக்கிறதா?

Friday, January 11, 2019

/ by U Editorial
இந்து முன்னணி நிர்வாகியின் பாலியல் வக்கிரத்தால் கொல்லப்பட்ட நந்தினி. சாதி ஆணவத்தால் அரங்கேறிய கொடூரம். இதே ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர் என தமிழர்கள் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் அரியலூரில் ஒரு 17 வயது சிறுமி சாதி வெறிப்பிடித்த இந்து முன்னணி நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். அதை நாம் மறந்துவிட்டோம். ஸ்வாதியை நினைவில் வைத்திருக்கும்போது நினைவில் வைத்திருக்கும்போது நந்தினியை மறந்துவிட்டோம். காரணம் அவள் ஒரு தலித். அன்று ஜனவரி 14 தமிழர் திருநாள். ஊரும் சேரியும் மாட்டிற்காக மும்முரமாக போராடிக்கொண்டிருந்தது. தைபுரட்சியில் கொல்லப்பட்ட ஒரு உயிரின் கதை வெளியில் வராமல் போனது. மாட்டிற்கு குரல் கொடுத்தவர்கள் பலரும் மனித உயிரை பற்றி பேசவே இல்லை. பாலிமர் தொலைக்காட்சியில் மட்டும் ஒரு பெண்ணின் அழுகிய நிர்வாண உடலை கிணற்றில் இருந்து மீட்கும் காட்சி ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பபட்டது.

நந்தினியின் உடலை பார்த்தும் இவள் இறப்பிற்கு வளர்ப்பு சரியில்லை என்றது சிலரின் நாக்கு. நந்தினியின் நிர்வாண உடலின் படத்தினை பதிவிட்டு என் கையில் சிக்காமல் போய் விட்டாள் என்று வறுத்தப்பட்டனர் சில சாதி வெறியர்கள்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்தவர் நந்தினி. வயது 17. 8ஆம் வகுப்பு வரை படித்த இவர் குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்கவில்லை. குடும்ப வருமானத்திற்க்காக 17 வயதில் கட்டுமான சித்தால் வேலை செய்து வந்திருந்தாள். கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்து முன்னணியின் அலுவலகம் இருந்துள்ளது.
அந்த அலுவலகத்திலேயே தங்கி இருந்த மணிகண்டன் கீழமாளிகை கிராமத்தில் இந்து முன்னணி ஒன்றிய செயலராக இருக்கிறார். அலுவலகம் இந்து முன்னணிருக்கு ரௌடிசம் செய்யும் கூடாரமாகவே இருந்துள்ளது. அங்கு, நந்தினியை சந்தித்த மணிகண்டன் சிறுமி நந்தினியை மிரட்டி காதலிப்பதாக நாடகமாடி வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

மணிகண்டன் செய்த வன்கொடுமையால் நந்தினி கருவுற்றுவிட்டால்.
28 டிசம்பர் அன்று நந்தினியை காணவில்லை. நந்தினியின் பெற்றோரும் உறவினரும் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு நந்தினியின் தோழி தேவி என்னும் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளானர். முதலில் எதுவும் தெரியாது என்று மறுத்த தேவி. ஒரு வழியாக மணிகண்டன் என்ற நபரை பற்றியும். கடைசியாக அவன் தான் அழைத்து சென்றதாகவும் கூறினார்.
மறுநாள் டிசம்பர் 29 அன்று நந்தினியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தேவியின் சாட்சியோடு. 17 வயது மைனர் சிறுமியை மணிகண்டன் என்பவர் கடத்திவிட்டார் என்று புகார் அளித்ததற்கு. காவலர்கள் கடத்தல் வழக்காக பதிவு செய்ய மறுத்துள்ளனர். நந்தினியை காணவில்லை என்று மட்டும் புகாரை பெற்றுக்கொண்டுள்ளனர். தேவி மணிகண்டனை பற்றி சாட்சியம் அளித்தும் மணிகண்டனை விசாரணைக்கு அழைக்கவில்லை. புகாரில் கூட மணிகண்டனின் பெயரை குறிப்பிடுவதை தடுத்துள்ளனர்.
நந்தினியை கண்டுபிடிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டு தலித் அமைப்புகள் போராட்டத்தை அறிவிக்க. மணிகண்டன் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். விசாரணைக்கு அழைத்தும் எந்த வித தடைகளும் இன்றி மணிகண்டன் ஜாமினில் வெளியில் விடப்படுகிறார். ஜனவரி 8 ஆம் தேதி நந்தினியின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு காவலர்கள் அவர்களையே மிரட்டுகின்றார்கள்.

தலித்திய இயக்கங்களை கூட்டி போராட்டம் நடத்துவதை கண்டித்தும். பெற்றோர் மகளை சரியாக வளர்க்கவில்லை அதனால், நந்தினி ஓடிப்போய்விட்டாள், கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் கூறியுள்ளார்கள்.
(நந்தினி கர்ப்பிணி என்பது உடலை கண்டு பிடிப்பதற்கு முன்பே எப்படி காவலர்களுக்கு தெரியும். நந்தினி கொல்லப்பட்டது முன்பே காவல்துறையினருக்கு தெரியுமோ என்ற சந்தேகம் வரவைக்கிறது). நந்தினி கடத்தப்பட்டு 17 நாட்கள் கழித்து ஜனவரி 14 அன்று கண்டுபிடிக்கப்படுகிறது அவள் உடல்.

மூன்று மாத கர்ப்பிணியின் பிறப்புறுப்பை கிழித்து சிசுவை வெளியில் எடுத்து நந்தினியின் உடைகளை வைத்து எரித்துவிட்டிருந்தனர். நந்தினியை கொள்வதற்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.
நந்தினியை கொன்றவன் ஆதிக்க சாதிக்காரன். நந்தினியின் கொலையை வன்கொடுமையாக பதிவு செய்ய வழக்கம் போல காவல் துறை மறுக்கிறது. ஏவிடன்ஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் PCR ல் பதிவு செய்யப்படுகிறது. மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைகின்றனர். 3 மாதங்களில் அவனுக்கு ஜாமின் கிடைக்கின்றது. அடுத்த 6 மாதத்தில் வேறு ஒரு பெண்ணோடு திருமணம் செய்துக்கொண்டு மீண்டும் இந்து முன்ணியில் இணைந்து கொண்டு சுக போக வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிகின்றான்.
நாம் இங்கே அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கிறோம்.

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
Designed by Dot colors