ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் 63 கிரேடு-சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 61

காலியிடங்கள் விவரம்: 
1. Bank Examiner /Supervisory Manager - 05 
2. Bank Examiner /Supervisory Manager (Corporate Lending) - 05 
3. Bank Examiner /Supervisory Manager (Treasury) - 05
4. Bank Examiner /Supervisory Manager (Retail Lending) - 05
5. Analyst - 05
6. Accounts Specialist - 05
7. IT Examiner/IT Analyst/IT Auditor - 10
8. Analyst - 05
9. System Administrator - 04 
10. Project Administrator - 03
11. Network Administrator - 03
12. Web Designer - 01
13. System Administrator (Big Data) - 01
14. Behavioural Scientist -01
15. System Administrator - 02
16. Legal Specialist - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிகவியல், பொருளாதரம் கணிதம், புள்ளியியல், நிதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, எல்எல்பி, எல்எல்எம், ஐஎஃப்ஆர்எஸ் மற்றும் பொறியியல் துறையில் கணினி அறிவியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.12.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஸ்கிரினிங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3613 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2019
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget